என் மலர்
நீங்கள் தேடியது "danger"
- எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்
திருப்பூர் :
திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)
எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-
மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.
- புல், பூண்டுகள் ஏராளமாய் மண்டிய நிலையில் புதர்களாக காட்சி அளிக்கின்றன.
- கிராமமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அரையபுரம் கேட்டுத்தெரு பகுதியில் தெருவாசிகள் பயன்படுத்தி வரும் குடிநீர் பம்புகள், மினிடேங்க் அருகே புல், பூண்டுகள், ஏராளமாய் மண்டிய நிலையில் புதர்களாக காட்சி அளிக்கின்றன.
இதனால் குடிநீர் பம்புகளை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அச்சத்தில் உள்ளனர்.
எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் மினிடேங்க் மற்றும் குடிநீர் குழாய் அருகே மண்டியுள்ள புல், பூண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
- பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- அபாயகரமான நிலை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் அமைந்துள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் 1991 இல் அமைக்கப்பட்டு, சுமார் 149 உறுப்பினர்களை கொண்டு சங்கம் நடைபெற்று வருகிறது.இதில் கிராமத்தை சார்ந்த நெசவாளர்கள் சொந்தமாக கைத்தறி நெசவு செய்து சேலை நெய்து அதை இந்த சங்கத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். தற்பொழுது இயங்கி வரும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதை பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. நேற்று திடீரென அதில் உள்ள முன் சுவர் இடிந்து விழுந்தது. நல்ல வேலையாக உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டவில்லை.இது குறித்து பணி புரியும் மேனேஜர் எழுத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும் இதை உடனடியாக சீரமைத்து நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உதவ வேண்டும் என்று நெசவாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி, தேவங்குடியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் வருகிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
இந்த தொட்டியின் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
- அதிவேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு வனச்சாலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் அனிவகுத்து சென்று வருகின்றன.
குறிப்பாக மேட்டுப் பாளையம்-குன்னூர் சாலையை அதிகளவில் வாகன பயன்பாடு உள்ளது. அதே சமயத்தில் இந்த சாலை அடர் வனத்தில் இருப்பதால் யானை, மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் நிலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.
அத்துடன் இந்த சாலையில் ஏழு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் இந்த வளைவுகளில் அடிக்கடி வாகனங்களும் ஒன்றொடு ஒன்று மோதி விபத்து ஏற்படுவதுடன் பள்ளத் தாக்கில் கவிழும் நிலையும் இருந்து வருகிறது. எனவே கொண்டை ஊசி வளைவில் வரும் வாகனங்கள் அந்த வளைவுக்கு முன்னரே வாகனங்கள் வருவதை அறிந்து கொள்ளவும், வன உயிரினங்கள் அந்த வழியாக வருவதை தவிர்க்கவும் சாலை ஓரத்தில் தானியங்கி ஒலிபெருக்கி கருவி தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும் என கூறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கி ஓரா ண்டு கூட முழுமை பெறாத நிலையில் தற்போது அந்த தானியங்கி ஒலிபெருக்கி முற்றிலும் பழுது பட்டு எந்த பயனும் இன்றி முடங்கியுள்ளது.
கொண்டை ஊசி வளைவு முன்பே சோலார் மூலம் இயங்கும் சென்சார் பொருத்தபட்டு அந்த வழியாக ஒரு வாகனம் கொண்டை ஊசி வளைவி னை கடக்கும் போது சென்சார் மூலம் தானாகவே ஒலி பெருக்கி இயங்கி வாகனம் வருவதை அறிவிக்கும் அதுமட்டுமின்றி அங்குள்ள சிக்னல்கள் மற்றும் அறிவுப்பு பலகை ஆகியவை ஒரே சமயத்தில் இயங்கும். இது மேலே இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கீழே இறங்கும் வாகனங்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத் தப்பட்டிருந்தது. ஆனால் அதனை முறையாக நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க தவறியதால் அது இப்போது பயன்பட்டில் இல்லாமல் முடங்கியுள்ளது.
தற்போது சாலை வாகனங்களை வந்தால் சிக்னல் கொடுக்கும் சென்சார்கள் மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை, ஒலிப்பெருக்கி என எதுவும் செய ல்பாட்டில் இல்லாததால் இந்த திட்டம் பயன்பாடு இன்றி உள்ளது. இனிவரும் காலம் கோடை சீசன் என்ப தால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்க ணக்கானோர் ஊட்டிக்கு வருவார்கள். எனவே விபத்துகளை தடுக்க அதற்குள் இந்த தானியங்கி ஒலிபெருக்கி அலாரம் திட்டத்தை பய ண்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இந்த பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இதனால் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது
. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி கழக அதிகாரிகள் துப்புரவு தொழிலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
- வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
- இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
- ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும்.
- உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம்.
குடிமங்கலம் :
சிக்ஸ் பேக்ஸ்' உடலுக்காக இன்றைய இளைஞர்கள் தங்களை வருத்திக் கொள்ள தயங்குவதில்லை.இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர்.தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய, புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர்.
இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- வயது மற்றும் எடைக்கு ஏற்ப தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொ ண்டால் போதும்.ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும். அதாவது ஒருவரின் எடை 50 கிலோ எனில் 75 கிராம் புரோட்டீன் போதும்.தொடர்ச்சியாக, உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம். எளிதாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும். இத்துடன் சிறிது கார்போ ஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவு சாப்பிடலாம். தேவையின்றி அதிக புரோட்டீன் உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் உண்ணும் உணவிலேயே புரோட்டீன் உள்ளது. காய்கறிகளில் புரோட்டீன் உள்ளவற்றை சாப்பிடலாம்.இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக அதிக புரோட்டீன் உள்ள உணவு உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும், சிறுநீரகம் பாதிப்படைவது உறுதி. உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக புரோட்டீன் தேவை என ஒரு சில புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்கின்றனர்.
இது உடனடி பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் சிறிது காலத்துக்கு பின் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலர் புரோட்டீன் உணவை தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்றனர்.
- பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
- ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
- அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
- ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.
ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.