search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Danny Faure"

    இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை செஷல்ஸ் அதிபர் டேனி பயூரேவிற்கு பரிசாக அளித்தார். #Seychelles #SushmaSwaraj #DannyFaure
    புதுடெல்லி :

    ஆறு நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அவரை நேற்று வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பாக டேனி பயூரே - மோடி விவாதித்தனர்.

    சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டுக்கு டோர்னியர் விமானத்தை  பரிசாக வழங்க முடிவு செய்யப்படிருந்தது.

    இந்நிலையில், டெல்லி பாலம் விமான நிலையத்தில் டேனி பயூரேவிற்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானத்தை வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பரிசாக அளித்தார்.  வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    டோர்னியர் விமானம், கடற்கரை பகுதிகளில் ரோந்து அல்லது அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் திறன் உடையது. ஏற்கெனவே செஷல்ஸ் நாட்டிற்கு ஒரு டோர்னியர் விமானம் உள்பட இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Seychelles #SushmaSwaraj #DannyFaure
    செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். #Seychellespresident #DannyFaure

    காந்திநகர்:

    செஷெல்ஸ் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடு ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 1,500 கி. மீ தூரத்தில் அமைந்த சேஷெல்ஸ் குடியரசில் 155 தீவுகள் உள்ளன. இது பிரட்டனிடம் இருந்து 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி விடுதலை பெற்றது. அந்நாட்டின் சிறிய தீவு ஒன்றில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 

    இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்துக்கு மாலை வந்தார்.

    வருகிற திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பயணத்தில் போது குஜராத், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அவர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. #Seychellespresident #DannyFaure
    ×