search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "darren Gough"

    புவி மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிடிலும் இந்தியாவிடம் மோதுமான வேகப்பந்து வீச்சு பலம் உள்ளது என முன்னாள் வீரர் டேரன் காக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.

    இந்நிலையில்தான் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்டில் இவர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஸ்விங் மன்னனான புவனேஸ்வர் குமார் இல்லது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் புவனேஸ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிடிலும் இந்தியாவிடம் மோதுமாக வேகப்பந்து வீச்சு உள்ளது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேரன் காக் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் மிகப்பெரிய இழப்புதான். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஏனென்றால் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்தியா தற்போதைய நிலையில் ஒரு வீரரை சார்ந்திருக்கவில்லை.

    முன்னதாக, இந்திய அணி அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் அல்லது ஜாகீர்கானை சார்ந்திருந்தது. இந்த நிலை நீண்ட நாட்களாக இல்லை. எந்தவொரு ஆடுகளத்தை கொடுத்தாலும், அதற்கு ஏற்றவாறு தங்களை தயார் செய்வார்கள். இந்த தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.



    இன்றைய நிலையில் சொந்த மைதானத்திலோ அல்லது வெளி நாட்டிலோ விளையாடியால் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமென்றால், உங்களுடைய தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். புவி ஸ்விங் செய்வார். பும்ரா ஸ்கிட்டிங் சீம் பவுலர், உமேஷ் யாதவ் புதுப்பந்தில் அதிக வேகத்துடன் வீசுவார். முகமது ஷமி ஸ்டிராங்க் மற்றும் ஹிட்ஸ். இசாந்த் ஷர்மா அனுபவம் வாய்ந்தவர். ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். அத்துடன் அதிக ஓவர்கள் வீசுவார்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அசத்தக்கூடியவர்கள். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கும். குறிப்பாக சுழற்பந்து வீச்சில்’’ என்றார்.
    ×