என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Darshanam"
- "ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்" எனக் கூறினார்.
- ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் இம்மாதம் துவங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் TNPL தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் இவ்வருகை குறித்து கூறுகையில், "தற்போது TNPL தொடரில் ஆடி வருகிறோம். லீக் விளையாட்டுகளில் ஆடுவதற்காக கோவை வந்துள்ளோம். ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் இந்த மொத்த சூழலுமே மிக அருமையாக இருக்கிறது. அதனால் அமைதியாகவும், மன குவிப்புத்திறன் அளிக்க கூடியதாகவும் மற்றும் மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. இது எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும். இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனை உணரத்தான் முடியும்" எனக் கூறினார்.
கோவை ஈஷா யோகா மையம், தமிழகத்தில் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. ஈஷாவிற்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதியோகியை தரிசிக்கவும், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
- சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் ராமுலம்மா தரிசனத்திற்காக வந்தார்.
- சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).
இவர் நேற்று சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் தரிசனத்திற்காக வந்தார். தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார். சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.
அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற போலீஸ்காரர் மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டார்.
இதையடுத்து மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார். போலீஸ்காரர் மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
போலீஸ்காரரின் மனிதாபிமானத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்தனர்.
- குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
- ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.
இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.
- ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர்.
- பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
மகரவிளக்கு பூஜை நடந்த கடந்த 15-ந்தேதி மாலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. சன்னிதானம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பொன்னம் பலமேட்டில் தெரியும் மகரஜோதி கையாலேயே ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இந்த முறை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை குறித்த காவல்துறையின் கணிப்பு சரிதான்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பலர் பதிவு செய்யாமல் வருகின்றனர். மாலை அணிந்து வருபவர்களை தடுக்க முடியாது. வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றவர்களைப்போன்று பதினெட்டாம்படியில் வேகமாக ஏற முடியாது.
நெரிசல் ஏற்படும் போது போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பது இயல்பான ஒன்று தான். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் கூறுவதை தேவசம்போர்டு ஏற்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது சரியல்ல. சபரிமலைக்கு எதிரான பொய் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது.
அதேபோல் தேவசம் போர்டு பணத்தை அரசு எடுக்கிறது என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது. தேவசம்போர்டு வருமானம் கோவில்களின் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது. பழங்குடியின தலைவர்களால் மகரஜோதி ஏற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
- இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.
தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.
- மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
- படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது.
- தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
- 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 14 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆனது.
ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் வரையிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்.
- 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர் ரெட்டி கூறியதாவது:-
ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியை அர்ச்சகர்கள் செய்தனர். ஆனந்த நிலையம் முதல் தங்கவாசல் வரை, கோவிலுக்குள் உள்ள உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தது.
சுத்திகரிப்புக்கு பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதையடுத்து, அர்ச்சகர்கள் சுவாமியின் மூலவிரட்டை மூடியிருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கினர்.
ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 11 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- 60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை அடி வாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி வருகின்றனர். பேரையூர் அடுத்த சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள் ளது சதுரகிரி சுந்தரமகாலிங் கம் திருக்கோவில்.
18 சித்தர்கள் வந்து தரிச னம் செய்த இம்மலையில் தற்போது வரையில் இங்கே சித்தர்கள் உலாவி வருகின் றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவர்.
இந்நிலையில் ஆடி அமா வாசை தினமான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பறை அடிவாரம் வழியாக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் கடுமையான சோத னைகளுக்கு உட்படுத்தப் பட்டு மலையேற அனுமதிக் கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தன்று அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால் 2,000 போலீசார், 50-க்கும் மேற் பட்ட நக்சல் தடுப்பு பிரிவு பிரிவினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருமுறை மலையில் தீ விபத்து ஏற்பட் டதால் பக்தர்கள் கடுமை யான சோதனைக்கு பின் னரே மலைக்கு அனும–திக் கப்பட்டு வருகிறனர். குறிப் பாக எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மேலே கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர் நிலைகளில் குளிக்கவும் அனுமதி கிடையாது. முன்ன–தாக நேற்று பிற்பகலை அமாவாசை காலம் தொடங் கிய காரணத்தினா–லும் நேற்று விடுமுறை தினத்தா லும் பக்தர்கள் நேற்று முதலே மலையேறி சுந்தர மாலிங்கம் சுவாமியை தரி சனம் செய்து வருவதால் இன்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தை விட சற்று குறை வாகவே காணப்பட்டது.
இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினம் வந்ததால் கூட்டம் பெருவா ரியாக பிரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. பிற்பகல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனும திக்கப்படுவர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நாட் களில் நாளை கடைசி தினம் என்பதால் நாளையும் பக்தர் கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
- கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்ணஆகார்ஷன பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.
மதுரை
தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்தது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
அவர்கள் அதிகாலை முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் மீனாட்சி அம்மன் கோவில் வெளியிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.
- விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
இக்கோவிலில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை, அஸ்வதை பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் விநாயகர், அமிர்தக டேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.
விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், வார்டு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்