என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » data leak
நீங்கள் தேடியது "data leak"
பேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #dataleak
வாஷிங்டன் :
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்ஸ்பெர்க் இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்ட உண்மையை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், பேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் தற்போது திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் பயணர்களின் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் 1.5 கோடி நபர்களின் மற்ற தகவல்களை ஹேக்கர்கள் திருடியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
மேலும், 1.4 கோடி மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரிசெய்து வரும் நிலையில், மீண்டும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Facebook #dataleak

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். #NEET #RahulGandhi #CBSE
புதுடெல்லி:
மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு, கடந்த மே 6-ந் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “நீட் தேர்வு எழுதியவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், ஒரு இணையதளத்தில் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அவர்களின் தனிநபர் ரகசியத்தை மீறும் செயல். இதை தடுக்க போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்திலாவது, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். இந்த திருட்டு பற்றி விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #NEET #RahulGandhi #CBSE #tamilnews

பயனாளர்களின் விபரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்துள்ள பேஸ்புக், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பயனாளர்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 20-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
×

X