search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter wedding"

    தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    குடும்பங்களில் தந்தை- மகள் பாசம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. அதனை வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. அந்த உணர்வுகளை பல தருணங்களை உணர்த்தி உள்ளன.
     
    அதன்படி தந்தையை இழந்த மகள் ஒருவர் தன் தந்தையின் உருவத்தை மெழுகுச்சிலையாக உருவாக்கி, அதன் முன் திருமணம் செய்துகொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி பத்மாவதி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார். இதற்கு தாயார் பத்மாவதியும் சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி ரூ.5 லட்சம் செலவில், அதற்கான வடிவமைப்பாளர்களைக்கொண்டு மெழுகு சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் செல்வராஜ் உருவ அமைப்பில் மெழுகுச்சிலையை உருவாக்கினர். அந்த சிலை முன் நேற்று புரோகிதர்களை கொண்டு, திருமண சடங்குகள் நடந்தன.

    தந்தை செல்வராஜ் உருவச்சிலை அருகில் தாயார் பத்மாவதி அமர, பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின்னர் மகேஸ்வரி. தந்தையின் உருவில் மெழுகு சிலை முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.

    தந்தையின் நினைவு ததும்பலில், மகேஸ்வரி தந்தையின் மெழுகு சிலையை உற்றுபார்க்க அவரது கண்கள் கலங்கியது. உடனே மகேஸ்வரியை திருமண வீட்டார் அனைவரும் சமாதானப்படுத்தினர். இந்த காட்சியை பார்த்த திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.



    நடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.



    அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருநாவுக்கரசர் சமீபத்தில் ரஜினிகாந்தை அமெரிக்காவில் சந்தித்து பேசியதால் கட்சி கோபப்பட்டதாகவும், அதனால்தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால், அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை என்று திருநாவுக்கரசர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Rajini #RajiniMeetsThirunavukkarasar
    ×