என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ddvsrh
நீங்கள் தேடியது "DDvSRH"
டெல்லிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்த தவான், நான் சதம் அடிக்க டெல்லி அணி இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும் என ஜோக்கிற்காக கூறினார். #IPL2018 #SRH
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 53 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 83 ரன்கள் சேர்த்தார்.
92 ரன்கள் அடித்த தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 ரன்னில் சதம் வீணாகிவிட்டதே என்று கேட்டதற்கு, நகைச்சுவையாக, அதற்கு டெல்லி டேர்டெவில்ஸ் இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘டெல்லி டேர்டெவில்ஸ் இன்னும் கூடுதலாக ரன்கள் அடித்திருந்தால், செஞ்சூரி அடித்திருக்க முடியும் (நகைச்சுவையாக). செஞ்சூரி வரும்போது, அந்த வந்தே தீரும்.
காயம் அடைந்து, மீண்டும் அணிக்கு திரும்பியபோது என்னால் ரன்கள் அடிக்க முடியவில்லை. என்னுடைய நம்பிக்கை எப்போதும் வலுவானதாகவே இருக்கும். கோட்லா மைதானத்தில் நான் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். இது ஒரு பிளாட் ஆடுகளத்துடன், சிறிய மைதானம். என்னுடைய அட்டக் ஆட்டத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். நான் என்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் என்பதை எனக்கு நானே எப்போதும் சொல்லிக் கொள்வேன்’’ என்றார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அதிரடி ஆட்டம் மூலம் 521 ரன்களுடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். #IPL2018 #DD
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 63 பந்தில் 128 ரன் குவித்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். நடப்பு தொடரில் 500 ரன்னை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை ரிஷப் பந்த் பெற்றார். அவர் 11 ஆட்டத்தில் 521 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஒரு சதம், 3 அரை சதம் அடித்துள்ளார். சராசரி 52.10 ஆகும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் 493 ரன்கள் (11 ஆட்டம்) எடுத்து 2-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் 471 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்து 3-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 435 ரன்கள் எடுத்து 4-வது இடத்திலும், சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு 423 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 பந்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். #IPL2018 #DDvSRH #RishabhPant
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா (9), ஜேசன் ராய் (11), ஷ்ரேயாஸ் அய்யர் (3) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
36 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், 56 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தின் முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது அரைசதத்தை 20 பந்தில் கடந்த ரிஷப் பந்த், கடைசி 8 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.
இந்த சீசனில் 3-வது சதத்தை ரிஷப் பந்த் அடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் வாட்சன் 106 ரன்களும், கிறிஸ் கெய்ல் 104 (அவுட் இல்லை) ரன்களும் அடித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvSRH
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் 43 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக ஹர்ஷல் பட்டேல் எதிர்முனையில் நிற்க ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
15-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பந்த் அரைசதம் அடித்தார். 36 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், அதன்பின் விஸ்வரூபம் எடுத்தார். ரிஷப் பந்த் அரைசதம் அடித்தபோது டெல்லி 14.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரி பறக்க விட்டார். இதனால் 18 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 97 ரன்கள் அடித்தார். 19-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 56 பந்தில் பூர்த்தி செய்தார்.
கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, 3 சிக்ஸ் விளாசி 26 ரன்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.
ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழக்கா, ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சரடன் 128 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங் செய்கிறது. #IPL2018 #DDvSRH
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விக்கெட் கீப்பர் சகா நீக்கப்பட்டு கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. தவான், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. ஷாகிப் அல் ஹசன், 6. யூசுப் பதான், 7. கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), 8. ரஷித் கான், 9. புவனேஸ்வர் குமார், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் ஷர்மா.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-
1. பிரித்வி ஷா, 2. ஜேசன் ராய், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. மேக்ஸ்வெல், 6. விஜய் சங்கர், 7. பிளங்கெட், 8. ஹர்ஷல் பட்டேல், 9. அமித் மிஸ்ரா, 10. நதீம், 11. டிரென்ட் போல்ட்

×

X