என் மலர்
நீங்கள் தேடியது "Debt"
- கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.
பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.
பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.
- நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.
- மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் தனியார் பள்ளி சார்பில் 1971-ம் ஆண்டு கால கட்டத்தில் பணியில் இருந்த போர் வீரர்களை கவுரவிக்கும் வகையில் வீரரைப் போற்றுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கலந்து கொண்டு முன்னாள் ராணுவ போர்வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசும்போது "போர் வீரர்கள் நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்கள். அதேபோல் மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும், அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். மேலும் இந்தியா ஒற்றுமைக்கு போர் வீரர்கள் மட்டும் காரணம் இல்லை, ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறையிலும் பணியாற்றுபவர்களும் முக்கிய காரணமாகும். நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.
- வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
- கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடனை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டை தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (62). இவர் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்காக இவரிடம் கோவில் நிர்வாக குழுவினர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கடனை திருப்பி தராமல் இருந்துள்ளனர். சந்திரசேகரன் அவரிடம் கடனை திருப்பி கேட்க சென்ற போது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கோர்ட் உத்தரவின்படி பெருமாள் (72), லட்சுமணன் (62), கோவிந்தராஜ், முத்துகுமார், சீனிவாசன், ராமசந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது .
இந்த கூட்டுறவு சங்கத்தில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
விழாவில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி நகர கூட்டுறவுவங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
- கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும் திட்டம் 2 -ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதவட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
கைவினை. கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்க ளுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2 -ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நு ட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1 - ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2 - ன் கீழ் மாணவர்க ளுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கூட்டுறவு காலனி பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது39). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் செந்தமிழ் செல்வன் சில இடங்களில் கடனுக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை திருப்பி செலுத்தவில்லை.
இதனால் கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே என மன வேதனையில் இருந்தார்.வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
- வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.
அதில் தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் 10-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல் செய்யும் நபர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் கடும் நெருக்கடியோடு கடன் தொகை திருப்பி கேட்பதால் அவர்கள் கால அவகாசம் கேட்டு வந்தனர்.
கால அவகாசம் தர இயலாததால் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல்தாரர்கள் இரவு பகல் முழுவதும் அங்கேயே முகாமிட்டு கடன் தொகையை திருப்பி கேட்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் கடன் வாங்கிய குடும்பத்தினர் அதிகாலையிலேயே நிதி நிறுவனங்களில் இருந்து வசூல்தாரர்கள் வந்து விடுவார்கள் என்ற பீதியில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பண்ணை வீடுகளில் தங்களது குழந்தைகளுடன் பயந்து தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.
பின்னர் மீண்டும் நள்ளிரவிற்கு மேல் வீட்டிற்கு வரும் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் அதிகாலையிலேயே தலைமறைவாகிவிடும் சூழல் ஏற்பட்டு வருகிறது. பெற்றோர்களின் இந்த நிலைமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த வாரம் அப்பகுதி பொதுமக்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து தப்பிக்கவும், கடன் தொகை செலுத்துவதற்கு ஏதுவாக எங்களுக்கு கால அவகாசம் வாங்கித் தருமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தான் வேலைக்கு செல்வதன் மூலம் போதிய வருமானம் கிடைக்கும். கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை.
இதனால் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை ஏன் அனுப்பவில்லை என்று செல்போன் மூலம் ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். எனவே எங்களுக்கு 6 மாத காலம் கால அவகாசம் வேண்டும். நாங்கள் கடனை திருப்பி செலுத்தி விடுகிறோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிதி நிறுவனங்களிடம் இருந்து கால அவகாசம் வாங்கி கொடுப்பதோடு, கடன் வாங்கிய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
- ஜரினாபீயிடம் சலிமா ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
- சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கமருதீன் மனைவி ஜரினாபீ (வயது51). இவரின் உறவினரான தியாகதுருகம் அன்சர் மனைவி சலிமா (வயது42) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜரினாபீ செல்போன் மூலம் சலிமாவிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சலீமா, நிஷா ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 30-ம்தேதி திருப்பூ ருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகின்றார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28)கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (28). இவர் ராமதாஸ்க்கு தெரியாமல் கடன் வாங்கிய நிலையில் கடந்த 30-ம்தேதி திருப்பூ ருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீசில் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகின்றார்.
- சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
- கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை:
மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி ஞானசுதன் சீலி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி ஞானசுதன் சீலி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆலோசனைப்படி அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமார் (வயது 34) மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் திட்டமிட்டு 20 நாட்களாக கடையை நோட்டமிட்டு இந்த நகை பறிப்பு சம்பவத் தில் ஈடுபட்டுள்ளனர் என் பது தெரிய வந்துள்ளது.
மேலும் மனைவி கவிதா அதிகமான கடன் தொல்லை இருப்பதால் எப்படியாவது கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 9 பவுன் நகையை மீட்டு வேறு ஏதாவது நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா, அவர்களுக்கு உடந்தையாக வேறு நபர்கள் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.
- பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் கம்மா பட்டியை சேர்ந்த வர் பாண்டிசெல்வி(வயது35). இவர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அதே பகுதியை சேர்ந்த பல பெண்கள் பெற்ற கடனை இவர் வாங்கி கொண்டு தவணையை தான் செலுத்துவதாக கூறியதாக தெரிகிறது.
ஆனால் அந்த தொகையை சரியாக செலுத்தாததால் அந்த பெண்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் விருதுநகர் கிழக்கு போலீசிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து நேற்று பாண்டி செல்வியை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இதையறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதிக்கப் பட்ட பார்வதி என்ற பெண் தான் அணிந்திருந்த வளை யலால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படு கிறது. உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். பாண்டிசெல்வி பல பெண்களிடம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.