search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deer antler"

    மண்ணடியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மான் கொம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை மண்ணடி பகுதியில் மான் கொம்பு கடத்தப்படுவதாக பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டுகள் முரளி, நவ்சப்பாஷா, முகமது, யாசியா ஆகியோர் ஏழு கிணறு தெருவில் ஒரு ஏ.டி.எம். வாசலில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவரது பெயர் முகமது ஆரிப் என்று தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளில் 1 அடி நீள முள்ள மான் கொம்பு இருந்தது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    அந்தமான் கொம்பை மண்ணடி செயின்ட் சேவியர் தெருவில் உள்ள டீக்கடை கேஷியர் கிருஷ்ணன் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரையும் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.

    ×