என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "defect"
- தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
- 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன.
திருப்பூர் :
தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுஓட்டுப்பதிவு எந்திரங்களை 6 மாதங்களுக்கு, சட்டசபை தொகுதி வாரியா, அனைத்து ஆவணங்களுடன் பாதுகாக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக இவற்றை பயன்படுத்துவது வழக்கம்.
தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஏப்., 6-ந் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, மே 2-ந் தேதியும் நடந்தது. அடுத்த 6 மாதங்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஆவணங்களுடன் பாதுகாக்கப்பட்டன. இடையே ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அந்த காலகட்டத்தை நீக்கி 2022 மே 31 வரை, கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்பட 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன. அவற்றை மாவட்டம் வாரியாக இருப்பு வைக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பழுதான எந்திரங்களை தனியாக பிரித்து வைத்து, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேதியில்அவற்றை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.