search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence deal"

    இஸ்ரேல் நாட்டில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. #Israel #India #MissileDefense
    புதுடெல்லி:

    ஏவுகணைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா-இஸ்ரேல் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி உள்ளன. பராக் 8 எனப்படும் இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் இரு நாட்டு படைகளிலும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த பராக் 8 குழுமத்தில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. அதன்படி 7 கப்பல்களில் பொருத்துவதற்காக 777 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,600 கோடி) செலவில் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் வாங்க இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன், மத்திய அரசின் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக வரும் அனைத்து அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கப்பலுக்கு ஆற்றல் அளிக்கும் இந்த அமைப்பில், டிஜிட்டல் ராடார், லாஞ்சர்கள், இடைமறிப்பு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் என நவீன கருவிகள் இடம்பெற்று இருக்கும்.

    இந்த ஒப்பந்தத்துக்காக பெல் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள இஸ்ரேல் நிறுவனம், இந்த ஒப்பந்தத்துடன் கடந்த சில ஆண்டுகளில் பராக் 8 தளவாடங்களுக்காக மொத்தம் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.43 ஆயிரம் கோடி) அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. 
    ×