search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dele Alli"

    வாரத்திற்கு ஒரு லட்சம் பவுண்டு சம்பளம் அடிப்படையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் உடனான ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்தார் டேல் அலி. #DeleAlli
    இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் முன்னணி பிட்பீல்டராக திகழ்பவர் டேல் அலி. 22 வயதே ஆன இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை செல்ல இவரது ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    டேல் அலி கடந்த 2015-ல் இருந்து இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் அணியான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இளம் வயதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரை நீண்ட காலமாக தக்கவைக்க டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி விரும்பியது.



    இதுதொடர்பாக டேல் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் டேல் அணி தனது ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்துள்ளார். டேல் அணி ஏற்கனவே வார்திற்கு 50 ஆயிரம் பவுண்டு சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது அது ஒரு லட்சம் பவுண்டாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இங்கிலாந்து அணி கேப்டனான ஹாரி கேன்-ஐ 2 லட்சம் பவுண்டிருக்கிற்கு டோட்டன்ஹாம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜோ ரூட்டை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதை இங்கிலாந்து கால்பந்து ரசிகர் டேல் அலி ஸ்டைலில் லோகேஷ் ராகுல் கொண்டாடினார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 25-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை ஜோ ரூட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டி விளிம்பில் பட்டு மின்னல் வேகத்தில் 2-வது ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுல் கைக்கு சென்றது.



    கேஎல் ராகுல் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த சந்தோசத்தை வலது கையை வைத்து சல்யூட் அடிப்பதுபோல் கொண்டாடினார். இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலி கோல் அடித்ததும் சல்யூட் அடித்து வெற்றியை கொண்டாடுவார்.



    அவர் மாதிரி வலது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரல்களை மடக்கி சல்யூட் அடிப்பது கடினம். இது மிகப்பெரிய அளவில் டேல் அலி செலபிரேட் சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலம் ஆனது. இதை இன்று கேஎல் ராகுல் செய்தார். அவரது செய்கை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    உலகக்கோப்பை கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து #WorldCup2018 #SWEENG
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் ஆர்வம் இல்லாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

    ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் சுவீடன் வீரர்கள் அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் அதை திறமையாக தடுத்தார்.



    அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.

    இரண்டு கோல் அடித்தாலும் இங்கிலாந்து டிபென்ஸ் ஆட விரும்பவில்லை. தொடர்ந்த அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 77-வது நிமிடத்தில் டேல் அலி மாற்றப்பட்டார். 90-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தத்தை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்திலும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    ×