search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Dharna Politics"

    டெல்லி துணை நிலை கவர்னர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 9 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. #ArvindKejriwal #DelhiDharnaPolitics
    புதுடெல்லி:

    டெல்லி தலைமை செயலாளர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து அம்மாநில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை கவர்னர் முட்டுக்கட்டை போட்டார்.

    இதனால், கடந்த 11-ம் தேதி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால், சந்திப்புக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அங்கு உள்ள வரவேற்பறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    உண்ணாவிரத போராட்டம் நடத்திய சிசோடியா உள்ளிட்ட இருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவருடன், துணை  முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் இரண்டு மந்திரிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு பலன் கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்தினர். 

    இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து அரசு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த துணை நிலை கவர்னர், கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும் கவர்னர் அறிவுறுத்திய நிலையில், தனது 9 நாள் தர்ணா போராட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் முடித்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ×