என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » denmarkopen
நீங்கள் தேடியது "DenmarkOpen"
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். #DenmarkOpen #SainaNehwal #CheungNganYi
ஒடென்சி:
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையா பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.40 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதல் நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பீவென் ஜாங்குடன் மோதினார். 55 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிந்து 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டும் இந்த போட்டியில் சிந்து முதல் சுற்றுடன் நடையை கட்டியது நினைவு கூரத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சாய்னா நேவால், செங் நகன் யுயை(ஹாங்காங்) எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நீயா-நானா? என்று இருவரும் கடுமையாக மல்லுகட்டினர். முதல் இரு செட்டை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது. 20-20, 22-22 என்று வரை சமநிலை நீடித்தது. கடைசியில் செங் நகன் அடுத்தடுத்து பந்தை வெளியே அடித்து விட, சாய்னாவின் வசம் வெற்றிக்கனி விழுந்தது. 1 மணி 21 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாய்னா அடுத்து 2-ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-18 என்ற நேர் செட்டில் ஷி யுகியை (சீனா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

×

X