என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » deputy cm home
நீங்கள் தேடியது "deputy CM home"
அருணாசல பிரதேசத்தில் குடியுரிமை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த வன்முறையில் துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். #ArunachalPradesh #Protest #ResidencyCertificate
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவினருக்கு நிரந்தர குடியுரிமை சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ந்தேதி முதல் தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் பரவி வருகிறது.
அந்த பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் மீறி நேற்றும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் நித்தி விகாரில் உள்ள துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது.
அத்துடன் அந்த அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் பெரும்பாலானவை போலீசாரின் வாகனங்கள் ஆகும்.
அங்கு தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கைவிட்டு அமைதி காக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. #ArunachalPradesh #Protest #ResidencyCertificate

×

X