என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "description"
- ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
- தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
இந்த நிலையில் 54-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல்காந்தி வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றி கள். எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை' நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படைத் தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை ஆகிய வற்றை குறிக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்படி இந்த மதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்து இருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படு வதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்பு கிறேன்" என கூறி இருந்தார்.
- இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
- ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.
சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.
ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
- எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் இன்று (மே 16) போலீசாளர் அவரது இல்லத்துக்கு சென்று 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே நாளை தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராக கோரி பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே டெல்லி பாஜக தீவிரமாக விமர்சனங்களை முனைவைத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின் ஸ்வாதிக்கு மலிவால் தனது X தள பக்கத்தில் "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.
எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தலே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். குறிப்பாக பாஜக இதை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பரவனாறு நிரந்தர மாற்று வடிகால் பாதை அமைக்கம் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- தோண்டப்பட்ட மண் என்.எல்.சி. சுரங்கம்-2 பகுதிக்கு செல்கிறது
நெய்வேலி,ஆக,2-
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், வளையாமாதேவி பகுதியில் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியில் அகற்றப்படும் மண், சுரங்கம்-2 மேல்மண் கொட்டும் இடத்தில் கொட்டப்படுவதாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளையமாதேவி பகுதியில் பரவனாறு நிரந்தர மாற்று வடிகால் பாதை அமைக்கம் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
என்.எல். சி. சுரங்க நீர், அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறும் நீரையும் கையாளும் வகையில் நிரந்தர மாற்றுப்பாதையானது அமைக்கப்படுகிறது. இந்த பணியில் தோண்டப்பட்ட மண் அருகே உள்ள வயல்களில் கொட்டி பயிர்களைச் சேதப்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுகிறது. தோண்டப்பட்ட மண் என்.எல்.சி. சுரங்கம்-2 பகுதியில் மேல் மண் கொட்டும் இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
- திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கண்காட்சியை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டார்.
- சசிகுமார் முன்னிலை வகித்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் மத்திய அரசின் திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் கடனுதவி திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ஆசாத், மாநில திட்ட பொறுப்பாளர் ராஜசேகர், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் டாக்டர் தேவ்ஜில், மகளிரணி பொதுச்செயலாளர் அபிநயா, விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ரமேஷ் கண்ணன், விவசாய அணி திருங்கலம் தெற்கு மண்டல தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், அவனியாபுரம் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
- என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். என்.சி.சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீ விபத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பாதுகாப்புடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இதில் கல்லூரி ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
- வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.
- இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் இணைந்து தென்னை மரம் ஏறும் கருவி குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன், சுமிதா பாரதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை மரம் ஏறும் கருவி குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
- செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன புல் குறித்த செயல் விளக்க பயிற்சி வழங்கினர்.
- இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன புல் குறித்த செயல் விளக்க பயிற்சி வழங்கினர்.
இதில் வேளாண் அலுவலர் சரவணன் அறிவுரையின்படி வாசு தேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியின் 4-ம் ஆண்டு மாணவிகள் அஞ்சலி, பிருந்தா, பரமேஸ்வரி, ரியா, கண்மணி, மதுமிதா, செல்வமங்கை, சுப்புலட்சுமி, உமினாமீனா ஆகியோர் கிராம தங்கல் பயிற்சியின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு சைலேஜ் குறித்து செயல் விளக்க பயிற்சியினை அளித்தனர்.
இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா். பயிற்சி முகாமில் திரளான விவசா யிகள் கலந்து கொண்டனர்.
- இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
- விவசாயிகள் காளான் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.
திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு கலைச்செல்வன் தலைமையில் பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சிக்கு ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளாண் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
விவசாயிகள் காளாண் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.
- கள்ளக்குறிச்சி அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) விஜயராகவன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்(த.க) அன்பழகன் பயிர் சாகுபடியில் அதிகப்படியான இராசயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து,தேவையான அளவு பயிர்களுக்கு உரமிட்டு மண்வளத்தை பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.இப்போ உர நிறுவன பிரதிநிதி அப்துல்ரகுமான் கூறுகையில் விவசாயிகள் தழைச்சத்து உரமான குருணை யூரியாவுக்கு மாற்றாக அனைத்து பயிர்களுக்கும் மேலுரமாக இப்கோ நானோ யூரியாவை ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதன் மூலம் உரச்செலவை மிச்சப்படுத்திடவும் மண்வளத்தை பாதுகாக்கலாம் என கூறினார்.
மேலும் நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயிகள் இரசாயன உரங்களை இடுவதை குறைத்து தக்கைப்பூண்டு, சணப்பை, கொளஞ்சி போன்ற பசுந்தாள் பயிர்களை விதைத்து பூக்கும் பருவத்தில் வயலில் மடக்கி உழுவதுடன், நன்கு மக்கிய தொழுவுரம் மற்றும் புண்ணாக்கு வகைகளையும் உரங்களாக பயன்படுத்தும்போது பயிர்களுக்கு பூச்சிநோய் தாக்குதல் இன்றி அதிக மகசூல் பெற்றிடவும்,நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திடவும் விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அப்போது கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார், கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள், வேளாண்மை துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கிராம முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்