என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Devadanapatti"
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது38). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக கொடைக்கானல் பள்ளங்கியில் விவசாய நிலம் உள்ளது.
புயல் காரணமாக இவரது விளை நிலம் மற்றும் தோட்டத்து வீடு பாதிக்கப்பட்டால் அதனை சீரமைப்பதற்காக குடும்பத்துடன் அங்கே தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு செல்லப்பாண்டியின் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை தூக்கி அருகில் இருந்த தோட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.
பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இன்று காலையில் தோட்டத்தில் பீரோ கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் செல்லப்பாண்டி வீட்டில் கொள்ளை நடந்தது தெரிய வந்தது. இது குறித்து செல்லப்பாண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்குள் புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகள் நிரம்பி வருகிறது.
தேவதானப்பட்டியில் நேற்று இரவு 9.40 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மின் வினியோகம் சீராகும் என பொதுமக்கள் தூங்காமல் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
மழை காரணமாக பனிப் பொழிவும் இருந்ததால் வீட்டுக்குள்ளும் தூங்க முடியாமல் கொசுக்கடியால் வெளியிலும் தூங்க முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இன்று காலை வரை மின் வினியோகம் சீராகவில்லை. இதனால் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வீட்டு அன்றாட தேவைகளுக்கும் மின் சாதனங்களை இயக்க முடியாத நிலை உருவானது. மின் வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்ட போது யாரும் பதிலளிக்க வில்லை.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேல்மந்தை தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தேனி அரசு சார்நிலை கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தனது மனைவி சுசீலாவுடன் மோட்டார் சைக்கிளில் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றார்.
பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காட்ரோடு பிரிவில் இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்கள் மீது மோதுவது போல் இடித்தனர்.
இதில் நிலை தடுமாறி செல்வமும், அவரது மனைவியும் கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் சுசிலாவின் கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு கோவில் பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். கோவில் வைப்பறையில் தேடிப்பார்த்த போது அங்கு விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. உண்டியலையும் உடைத்து எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி விட்டு ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.
இன்று காலையில் கோவில் திறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். கொள்ளையர்கள் உள்ளே வந்திருப்பதை அறிந்து இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
கொடைக்கானல் குண்டுபட்டியை சேர்ந்த ரவீந்திரன் மகன் பிரதீப்குமார் (வயது27). இவர் காய்கறிகள் ஏற்றி செல்லும் வேன் ஓட்டி வந்தார். நேற்று கொடைக்கானலில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
காமக்காபட்டி செக் போஸ்ட் அருகே மற்றொரு வேன் டிரைவரான செக்காபட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்து பேசுவதற்காக தனது வேனை ஓரமாக நிறுத்தி விட்டு பிரதீப்குமார் கீழே இறங்கி வந்தார்.
அப்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாகனங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தன. ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்துகொண்டிருந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து செக்போஸ்ட் மீது மோதி அங்கு நின்று கொண்டிருந்த பிரதீப்குமாரையும் கீழே தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேகமாக வந்த கார் மோதியதில் சின்னச்சாமி மற்றும் முத்தரசன் என்பவர்களும் படுகாயம் அடைந்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்