search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devaswam board"

    கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என தோன்றவில்லை என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் நிலையில், 18-ம் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து முதல்மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தேவசம் போர்டு தலைவர், பெண்களின் உபயோகத்துக்காக நிலக்கல் பகுதியில் கழிவறைகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். குறைந்த அளவே நேரம் இருப்பதால், அதிகமான வசதிகளை இப்போது செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என தாம் நினைக்கவில்லை எனவும், அக்டோபர் 3-ம் தேதி மறுஆய்வு மனு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    ×