search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development seminar"

    • தொழில் முனைவோர் மேம்பாட்டு செல் மற்றும் இன்குபேசன், இனோ வேசன், செல் சார்பில் தொழி ல்முனைவோரு க்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மதுரை கிரீன்ஸ்கார்ட் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி சுய தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை பெறுவதற்கான வழிமுறை குறித்து சிறப்புரையாற்றி னார்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு செல் மற்றும் இன்குபேசன், இனோ வேசன், செல் சார்பில் தொழி ல்முனைவோரு க்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். எந்திரவியல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் அனை வரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.

    மதுரை கிரீன்ஸ்கார்ட் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி சங்கரலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுய தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை பெறுவதற்கான வழிமுறை குறித்து சிறப்புரையாற்றி னார்.

    இந்த நிகழ்ச்சியில் உற வின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செய லாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்த ரங்கி ற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வ ர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்தி கேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்த னர். கல்லூரியின் தொழி ல்முனைவோர் மேம்பாட்டு செல்லின் ஒருங்கிணை ப்பாளர் சுருளிமணி நன்றி கூறினார்.

    ×