search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Developnment Project Works"

    • காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது.
    • 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் வட்டாரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிந்த பணிகளை திறந்து வைத்தும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று வருகிற 5ந் தேதி சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரால் காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்15 ம் தேதி அன்று மதுரையில் துவக்கி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 137 மாணவர்களுக்கும் 178 மாணவிகளுக்கும் என மொத்தம் 315 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,97,551 மதிப்பீட்டிலும், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 245 மாணவிகளுக்கு ரூ.12,23,040 மதிப்பீட்டிலும் என மொத்தம் 560 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.பின்னர் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் முதல் பொங்கலூர் சாலையில் தொடங்கி குன்னாங்கல்பாளையம் ஆதிதிராவிடர் காலணி வரை ரூ.25.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், கணபதிபாளையம் ஊராட்சி எஸ்.ஆர்.சி நகர் பகுதியில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் தானியக்கிடங்கு கட்டடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்தும், அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.92.62 லட்சம் மதிப்பில் 13 வளர்ச்சி புதிய பணிகளை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.1 கோடியே 46லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் முடிந்த பணிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

    இந்தநிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முருகேஷன், பல்லடம் கூட்டுறவு கள அலுவலர் சுரேஷ்குமார்,ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் தேன்மொழி, பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், வில்சன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள்,பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×