search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Difficulty"

    • இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.
    • இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவது வழக்கம. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை நீர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தேங்கி உள்ளது. இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் ஆரம்ப சுகாதாரத்தின் வாயிலிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிராமப்புறங்களில் வரும் நோயாளிகள் கடுமை யான சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். மேலும், அவசர த்திற்கு இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.

    இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு டாக்டர்களும், நர்சுகளும் சென்று விட்டனர். எனவே, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி நிற்கும், மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளா ர்கள். மேலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீண்டும் மருத்துவமனைக்கு வர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் நின்றது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வழக்கத்தை விட அதிகமான மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் ஒரு சிலர் மழைநீரையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்கி சென்றனர்.

    ஆனால் தண்ணீருக்குள் சென்றவுடன் வாகனங்கள் இயங்காமல் நின்றது . இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, தள்ளிக்கொண்டு வெளியேறினர் . இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருபுறமும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டு போக்குவரத்ததுக்கு தடை விதிக்கப்பட்டது. . இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் தண்ணீர் வடிந்ததும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    • காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • மாற்று சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோ கிப்பாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி நகராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

    இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும், பணி நிமித்தமாகவும் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலை வழியாக தான் செல்கின்றனர். இந்த பாதையில் ரெயில்வே கேட்டு அமைந்துள்ளது.

    இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து உழவர் சந்தை வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு மாற்று சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டி யன், திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு செயற்குழு உறுப்பினர் சாந்தி நாகராஜன், நகராட்சி உறுப்பினர்கள் ஜாகிர் உசேன், எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலைகளில் இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • தீ வைத்து எரிப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டினம் கடற்கரை சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும், சில நேரங்களில் குப்பைகளை மர்மநபர்கள் சிலர் தீ வைத்து எரிப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை போக்குவரதுக்கு லாயகற்ற நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • முதியவர்கள் இச்சாலை வழியாக செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் உள்ள பெரிய பேட் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில், கடந்த 22 ஆண்டுகளாக சாலை வசதி சரி செய்யப்படாமல், போக்குவரதுக்கு லாயகற்ற நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அவசர மருத்துவ சிகிச்சை க்கு ஆம்புல ன்ஸ், தீயணை ப்பு வாகனம் கூட வர முடியாத அளவிற்கு சாலை பழுதடைந்துள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் இச்சாலை வழியாக செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில், சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, சாலையை, உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வாகனங்கள் வளைத்து நெளித்து ஓட்டுவதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    பூதலூர்:

    திருக் காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சா–லையில் பூதலூரில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன, இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாக பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதேபோல விண்ணம ங்கலம் அருகே இதே சாலையில் வெண்ணாற்றில் அமைந்துள்ள பாலத்திலும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.

    வழுவிழந்த பாலம் என்று இரண்டு பக்கமும் அறிவிப்பு பலகைகளை வைத்துவிட்டு குண்டும் குழியுமாக வைத்திருப்பதால் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    செங்கிப்பட்டி -திருக்காட்டுபள்ளியை இனணப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிக மாகவேனும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • ஆக்கிரமிப்புகளினால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் கடை வீதிகளில் சாலையின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்து வருவதாகமாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    இந்த ஆக்கிர மிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.

    பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்–பட்டதை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவிப்பு செய்திருந்தார்.

    ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிருப்புகளை அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகளை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்–பட்டிருந்தது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பிறகு திருவாரூர் கடைவீதி விசாலமான அகலத்தில் காணப்பட்டது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டதால் பொது மக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி வர செல்ல முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டது.

    • பெண்கள், வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர்.
    • பாதையை மாற்றி அமைக்க பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே புளியஞ்சேரியில் மிகவும் பழமையான புராதான சாலையாக காலம் காலமாக கல்லணை பூம்புகார் சாலை அமைந்துள்ளது. பயன்பாட்டில் இருந்த அந்த சாலை தற்போது தேசிய நெடுஞ்சாலை பாதையாக மாற்றி அமைத்து வருகிறார்கள்.

    இந்தப் பாதையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், அவசரகால சிகிச்சைக்கு செல்பவர்கள், பேருந்துகள் என தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் ஆறுபடையில் நான்காம் படை வீடான சுவாமிமலை கோவிலுக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றி அமைப்பதால் இவ்வழியில் அனைவரும் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு சுற்றி செல்வதால் முக்கியமாக இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை நடைபெறுகிறது.

    இதனால் பெண்களும், வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர். எனவே இந்த பாதையை மாற்றி அமைக்க வேண்டியும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், தமிழக அரசுக்கும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று காலை கல்லணை- பூம்புகார் சாலையில் புளியஞ்சேரி சத்தியாகாலனி அருகில் 200 க்கும் மேற்பட்பட்ட பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கும்பகோணம் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்.

    சுவாமிமலை சிவ செந்தில்குமார், கும்பகோண கிழக்குஆய்வாளர் அழகே சன் மற்றும் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் அமைதி பேச்சு வார்த்தை கோட்டாட்சியர் தலைமையில் ஏற்பாடு செய்வதாகவும் உடனே புறவழிச்சாலை அமைக்க ப்பட்டுள்ள இடங்களில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது இந்த சாலை மறியல் போரா ட்ட த்தால் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
    • கொசுக்கள் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.

    ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் டவுன் போலீஸ் நிலையம் ரோட்டில் ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் கொசுக்கள் தேங்கி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். ஏராளமான வாகனங்கள் சென்று வரும்.

    தற்போது கழிவு நீர் தேங்கி இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துடனே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மின்கம்பங்கள் இருப்பது அருகில் வந்த பிறகு தான் தெரிகிறது.
    • இடையூறாக இருக்கும் 2 மின்கம்பங்களை வேறு இடத்தில் மாற்றி நட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆத்து பாலம் திவான் நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கும். பரபரப்பாக இயங்க கூடிய இந்த நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    ஆனால் சாலையில் இருந்த அடுத்தடுத்த 2 மின்கம்பங்கள் அகற்ற ப்படாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் திரும்பும்போது சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் சில நேரங்களில் இந்த மின்கம்பங்கள் இருப்பது அருகில் வந்த பிறகு தான் தெரிகிறது. இதனால் மின் கம்பங்கள் மீது வாகனம் மோதி விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

    எனவே போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் 2 மின்கம்பங்களை வேறு இடத்தில் மாற்றி நட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

    • போதிய வகுப்பறை வசதிகளின்றி மாணவர்கள் மிகவும் சிரமம்.
    • விரைவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சகடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

    பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் அரசாணையின் அடிப்படையில் இடிக்கப்ப ட்டுவிட்ட நிலையில், போதிய வகுப்பறை வசதி இன்றி மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் படித்து வருகின்றனர்.

    தற்காலிக கூடாரங்களிலும் தனியார் கட்டடங்களிலும் தற்போது பல பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    எனவே, விரைவில் இந்தப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதியின் மூலம் விரைவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வ.செங்கு ட்டுவன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
    • சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை உள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு ஊராட்சி பகுதியில் ஆதித்திராவிட தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை போட்டு ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கற்கள் கப்பிகள் பெயர்ந்து குண்டு குழியுமாகவும் சாலையாக மாறியது. இந்த சாலை தற்சமயத்தில் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

    மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    அதுவும் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனை செல்வோர் கடும் சிரமத்தை கடந்து செல்கின்றனர்.

    மேலும் சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து இருப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்கள் சில அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலைமையும் உள்ளது.

    மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி நின்று எங்கு பள்ளம் உள்ளது என தெரியாமல் பலர் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

    புதிய சாலை போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×