search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூழ்ந்து நிற்கும் மழைநீரால்  பிரம்மதேசம் அரசு மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது: நோயாளிகள் கடும் அவதி
    X

    மழைநீர் சூழப்பட்டுள்ளதால் பிரம்மதேசம் அரசு மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பிரம்மதேசம் அரசு மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது: நோயாளிகள் கடும் அவதி

    • இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.
    • இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவது வழக்கம. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை நீர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தேங்கி உள்ளது. இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் ஆரம்ப சுகாதாரத்தின் வாயிலிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிராமப்புறங்களில் வரும் நோயாளிகள் கடுமை யான சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். மேலும், அவசர த்திற்கு இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.

    இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு டாக்டர்களும், நர்சுகளும் சென்று விட்டனர். எனவே, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி நிற்கும், மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளா ர்கள். மேலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீண்டும் மருத்துவமனைக்கு வர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×