search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் ரெயில்வே சுரங்க பாதையில் குளம் போல்  தேங்கிய தண்ணீர்:தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை
    X

    கடலூரில் அதிகாலையில் பெய்த திடீர் கனமழையால் திருப்பாதிரிபுலியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் சுழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்

    கடலூர் ரெயில்வே சுரங்க பாதையில் குளம் போல் தேங்கிய தண்ணீர்:தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை

    • அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் நின்றது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வழக்கத்தை விட அதிகமான மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் ஒரு சிலர் மழைநீரையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்கி சென்றனர்.

    ஆனால் தண்ணீருக்குள் சென்றவுடன் வாகனங்கள் இயங்காமல் நின்றது . இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, தள்ளிக்கொண்டு வெளியேறினர் . இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருபுறமும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டு போக்குவரத்ததுக்கு தடை விதிக்கப்பட்டது. . இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் தண்ணீர் வடிந்ததும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×