என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dinesh Kumar"
- 152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல்.
- அரசு வேலை, தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் தினேஷ்குமார் பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை பேச அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 23 -வது வார்டு கவுன்சிலர் துளசி மணி பேசினார். அப்போது 23 -வது வார்டு தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். அங்கேரிபாளையம் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட வருவதில்லை. ஆகையால் பணிகள் தரமற்ற முறையில் தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் தினமும் அதை பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ம.தி.மு.க. கவுன்சிலர் சாந்தாமணி:-
38வது வார்டில் மங்களம் ரோடு குறுகளாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் பின்னர் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் சென்று அடையவில்லை. அதனையும் சரி செய்ய வேண்டும்.
மேலும் தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருளாக காணப்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி முழுவதும் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் ,தெரு நாய்களை பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கருத்தடை செய்து ஐந்து நாட்கள் பராமரித்து அதனை உரிய முறையில் மீண்டும் அந்த இடத்தில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
51 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில்,
152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல். அரசு வேலை ,தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 152-வது அரசாணையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-
மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய போதுமான நிதி உள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தகவல் கொடுத்தால் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
4-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 40 மீட்டர் பணிகள் மட்டும் தான் செய்ய வேண்டியது உள்ளது. 2023ம் ஆண்டுக்குள் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.
- 49-வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- பொதுமக்களின் கோரிக்கையை உடனே சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் மக்களுடன் மேயர் திட்டத்தை மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மேலும் அதனை செயல்படுத்தும் வகையில் 49-வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின் விளக்கு, பூங்கா அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை உடனே சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து 22 வது வார்டுக்கு உட்பட்ட குமாரநாமபுரம், கந்தசாமி லேஅவுட், ஓடக்காடு பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஆய்வு செய்தார் .அப்போது வகுப்பறை, கழிவறை வசதிகள் தேவை குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேபோல் மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகள், வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- கழிவுநீர் நிரந்தரமாக வெளியேற வழிமுறை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
- விரைவாக தார் சாலையை அமைத்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்
திருப்பூர் :
திருப்பூர் 54 வது வார்டு உட்பட்ட வீரபாண்டி, ஆலங்காடு, ஜே.ஜே நகர் ,கருப்ப கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்காடு பகுதியில் சாக்கடை கழிவுநீர் வெளியேற முடியாமல் இருப்பது குறித்தும், அதனை அப்புறப்படுத்த வழிமுறையும், கழிவுநீர் நிரந்தரமாக வெளியேற வழிமுறை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இதே போல் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் தடைபட்டிருந்த தார்சாலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு விரைவாக தார் சாலையை அமைத்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் வீரபாண்டி ஜெ. ஜெ நகர், கல்லாக்காடு, முத்தனம்பாளையம், ஆகிய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சியின் கமிஷனர் கிராந்தி குமார் பாடி, 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் 54வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளருமான சி. அருணாச்சலம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் உடன் இருந்தனர்.
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் குத்துச் சண்டை போட்டியில் தனது திறமையை கொண்டு தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர், இதுவரை 17 தங்கங்களும், ஒரு சில்வர் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இதுகுறித்து வீரர் தினேஷ் குமார் கூறுகையில், தற்போதைய மத்திய அரசோ அல்லது முந்தைய மத்திய அரசோ தமக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை எனவும், தற்போது அரசின் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக ஐஸ்கிரீம் விற்று வருவது, இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #DineshKumar #ArjunaAward #Haryana
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்