search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director Gowthaman. jail"

    காவிரி நதிநீர் போராட்டத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டைரக்டர் கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #Gowthaman
    காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன.

    மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை கண்டித்து அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதில் நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சினிமா டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக சீமான், கவுதமன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    போராட்டத்தின் போது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டது, தடையை மீறி அண்ணாசாலையில் கூடியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கவுதமன் மீது மேலும் 2 வழக்குகளும் போடப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகளில் நேற்று இரவு டைரக்டர் கவுதமன் திடீரென கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கவுதமனை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் சீமான் ஏற்கனவே முன் ஜாமீன் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #Gowthaman
    ×