search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled cricket"

    • இறுதி ஆட்டத்தில் பாண்டிச்சேரியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
    • 9விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

    திருப்பூர் :

    ஆந்திராவில் நடைபெற்ற தேசிய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் பாண்டிச்சேரியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகனாக 5 விக்கெட் கைப்பற்றிய மாற்றுத்திறனாளி வீரரான திருப்பூரை சேர்ந்த முகமது இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் 9விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

    அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சு.குணசேகரன், பழனிசாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்து கவுரவித்தனர். அப்போது கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்பட திரளானவர்கள் உடனிருந்தனர்.  

    • ஷாகுல் ஹமீது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இந்திய அணிக்காக 54ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார் .
    • இறுதி போட்டியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

    மங்கலம் :

    நேபாள நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, அரியலூர் மாவட்டம் -சந்தோஷ்குமார், ஈரோடு மாவட்டம்-மணிவண்ணன் ஆகியோர் தேர்வாகியிருந்தனர்.பின்னர் நேபாள -இந்திய தொடரில் 2-வது போட்டியில் விளையாடிய திருப்பூர்- ஷாகுல் ஹமீது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இறுதிவரை அவுட்டாகாமல் இந்திய அணிக்காக 54ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார் .

    . காத்மாண்டுவி்ல் நடந்த போட்டியின் இறுதியில் நேபாளத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியில் 15 பேர் இடம் பெற்ற நிலையில் 11பேர் விளையாடினர். இதில் திருப்பூர் ஷாகுல் ஹமீது,அரியலூர்-சந்தோஷ்குமார், ஈரோடு-மணிவண்ணன் ஆகியோர் இந்த தொடரில் சிறந்த வீரர்களுக்கான விருதையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய திருப்பூர் மாவட்டம், மங்கலம்அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திய அணி வீரர் ஷாகுல்ஹமீது க்கு வி. ஜெயம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஜெயம் என்.மகேந்திரகுமார் சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    ×