என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » district judge suspension
நீங்கள் தேடியது "district judge suspension"
குழந்தைகள் பாலியல் குற்றவழக்கில் ஆதாயம் பெற்று ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மாவட்ட நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர்.
சென்னை:
திருப்பூரில் 2014-ம் ஆண்டு மாவட்ட முதன்மை நீதிபதியாக கணேசன் இருந்து வந்தார். குழந்தைகள் பாலியல் குற்றம் தொடர்பான ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அவர் ஜாமீன் வழங்கினார். நீதிபதி, ஆதாயம் பெற்று கொண்டு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் 16.11.2014 அன்று அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
பின்னர் இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்த நீதிபதி ரவிச்சந்திர பாபுவை ஐகோர்ட்டு நியமித்தது. அவர், விசாரணை நடத்தி அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் ஐகோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட நிர்வாக கமிட்டி விசாரித்தது. அதைத்தொடர்ந்து 2016 ஆகஸ்டு 30-ந்தேதி நீதிபதி கணேசனை டிஸ்மிஸ் செய்து ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி உத்தரவிட்டது.
இந்த டிஸ்மிஸ் உத்தரவு செல்லாது என அறிவிக்க கோரி கணேசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்து வந்தது.
கணேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குழந்தை பாலியல் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு அரசு வக்கீல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது எனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை.
எனவேதான் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினேன். எனவே, என்னை நீக்கியது செல்லாது என்று கூறி இருந்தார்.
ஆனால், நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரணையில் போலீஸ் தரப்பில் பாலியல் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
மேலும் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது நீதிபதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. இத்துடன் நீதிபதி ஆதாயம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து நீதிபதி கணேசன் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிபதிகள் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். தான் நீக்கப்பட்டது தவறானது என்பதற்கான உரிய ஆதாரங்களை கணேசன் சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
நீதிபதி கணேசன் 1988-ம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதி ஆனார். 24 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றினார். 30.12.2012-ல் அவருக்கு ஓய்வு பெறும் 58 வயதை அடைந்தார்.
ஆனாலும், அவருக்கு ஐகோர்ட்டு 2 ஆண்டுகள் பதவி நீடிப்பு செய்தது. அவர் திருப்பூரில் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் ஊழல் குற்றச்சாட்டில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

×

X