search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk laeder"

    புதுவை மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவை வழிநடத்த ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #mkstalin

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள மாநில கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் சீத்தா. வேதநாயகம் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, மாநில கழக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் புதுவை தெற்கு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக செயற்குழு கூட்டத்தில் தலைவர் கலைஞர் மறைவிற்கு எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    புதுவை மாநிலத்தில் 4 முறை தி.மு.க. ஆட்சியை அமைத்து அழகு பார்த்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு புதுவை மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிற காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு அமைய அவர் எடுத்த முயற்சியும், இவ்வரசு நிறைவேற்றுவதற்காக அவர் அளித்த ஆலோசனைகளும், தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்து அண்ணா திடலில் அவர் ஆற்றிய உரையும் என்றும் நெஞ்சில் இருந்து அகலாதவைகள். தென் மாநிலங்களுக்கு பயணம் செல்லும்போதெல்லாம் புதுவைக்கு வந்து மகிழ்ச்சியோடு அவர் ஓய்வெடுத்துச் சென்றதெல்லாம் இந்த மண்ணுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம்.

    இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தோடு, புதுவையை இணைக்க வேண்டும் என்று அப்போதைய மத்திய, தமிழக அரசுகள் முயற்சித்தபோது வெகுண்டெழுந்த தலைவர் கலைஞர் இந்த இணைப்பு முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மக்கள் கொதித்தெழுந்து “இணைப்பு எதிர்ப்பு போராட்டம்” நடத்தியபோது, புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தை அப்போராட்டத்திற்கு தலைமையேற்கச் செய்தவர். அதுமட்டுமல்லாமல் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை புதுவை மக்களுக்கு துணை நின்றவர் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவருக்கு புகழஞ்சலி செலுத்துவதும், அவர் வழியில் கழகத்தின் பணிகளை முன்னெடுப்பதும், புதுவை மாநில தி.மு.க. கடமையாக கருதுகிறது.

    தலைவர் கலைஞரின் பேரிழப்பிற்கு பிறகு கழகத்தைக் கட்டிக்காக்க, கழகத்தை வழிநடத்த, ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களின் ஏகோபித்த எண்ணம் நிறைவேற, கழகச் செயல் தலைவர் தளபதியார் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்க மாநிலக்கழகம் ஏகமனதாக முன்மொழிகிறது.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, பாஸ்கர், டாக்டர் மாயக் கிருஷ்ணன், தொகுதி கழக செயலாளர்கள் நட ராஜன், சக்திவேல், திராவிடமணி, சீத்தாராமன், லோகு, ரவிச்சந்திரன், பாண்டு அரிகிருஷ்ணன், வெங்கடாஜலபதி, சாரங்கன் (பொறுப்பு), ராமசாமி, கலியகார்த்திகேயன், இளை ஞர் அணி அமைப்பாளர் முகமது யூனூஸ், மாணவர் அணி அமைப்பாளர் மணி மாறன், விவசாய அணி அமைப்பாளர் சோமசுந்தரம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன், தொண்டர் அணி அமைப்பாளர் சுரேஷ், மருத்துவர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், மீனவர் அணி அமைப்பாளர் தனசேகர், நெசவாளர் அணி அமைப்பாளர் மதி, சிறுபான்மை அணி அமைப்பாளர் அகஸ்டீன் சித்து, இலக்கிய அணி அமைப்பாளர் பி.டி. பன்னீர் செல்வம், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் சுசீலா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் தேன்மொழி மற்றும் அனைத்து அணிகளின் துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார். #mkstalin

    ×