search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors Salary"

    • மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்க நிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான்.
    • முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது தான் அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கை மிகவும் எளிமையானது; நியாயமானது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்க நிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான்.

    ஆனால், மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4,9,13,20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8,15,17,20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுகிறது.

    இதனால் 14-ம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-வது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-வது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது. இந்த முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது தான் அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும்.

    கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழக அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.

    எனவே, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5,9,11,12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×