என் மலர்
நீங்கள் தேடியது "document"
- மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிக்க விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பக் கட்டணம் மற்றும் முதலீடுகள் செலுத்துவதை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
ஆசை வார்த்தைகளை விளம்பரப்படுத்தும் போலி நிறுவனங்களை நம்பி கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொகை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் வேலை, கல்லுாரிகளில் சேர வாய்ப்புகள் வாங்கித்தர அலைக்கழிக்கப் படும்போது இந்நிறுவனங்களுக்கு அளித்த ஆவணங்கள் மற்றும் முதலீடுகள் திரும்ப பெறுவது கடினமான பணியாகும். மேலும் இந்த பரிமாற்றத்திற்கு முறைப்படி சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டி உள்ளதால் காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இளைஞர்களும் மாணவ, மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள்.
- ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக " சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது " 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ஐந்து லட்சம் ) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.
மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வங்கிகளில் கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும்.
- அரசின் உத்தரவுக்கு கப்பலூர் தொழிற்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
திருமங்கலம்
கப்பலூர் தொழிற்சங்கம் சார்பாக 30-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கப்பலூர் தொழிற்சங்கத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் ரகுநாத ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது அணுகு சாலையை முழுமையாக பயன்படுத்திச் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய மின்சார கட்டண உயர்வு, சிறு மற்றும் குறு தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டணம் ஏற்றப்படாவிட்டாலும், தற்போதைய உயர்வு சுமார் 32 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகி உள்ளது. இதனால் வெளி மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாமல் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டணம் குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது சிறு, குறு தொழில்கள் உற்பத்தி வெளி மாநில தொழிலாளர்களை நம்பும் நிலை உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக அரசு அளிக்க வேண்டும்.
வங்கிகளில் தொடர்ந்து கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அரசின் முடிவிற்கு கப்பலூர் தொழிற்சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
- குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதி மாதம் நான்காவது வெள்ளிக் கிழமைகள் தோறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 23-ந் தேதி (வெள்ளிகிழமை) மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி அளவில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதால் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1, கைப்பேசிஎண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து நெல் விற்பனை செய்ய கூடாது என உத்தரவு அமலில் உள்ளது.
இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சை மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குடிமை பொருள்வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் உத்தரவி ன்பேரில் திருச்சி மண்டல குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில் தஞ்சாவூர் சரக குடிமைபொருள் குற்ற புலனாய்வு துறை டி.எஸ்பி. சரவணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட குறறபுலனாய்வு துறை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10½ டன் நெல் மூட்டைகள் இருந்தது
. இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிமணி (வயது 22), அரியலூர் நாகமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்ததும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியை யும் பறிமுதல் செய்து திருநாகேஸ்வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கும்பகோணம் டிவிசன் டெப்டி மேனேஜர் இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
முழுமையான விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விவரங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
- பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 1-8-2022 முதல் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் இதுவரை சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
தற்பொ ழுது பொதுமக்கள் நலன் கருதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச் செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6B -இல் பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
பொதுமக்கள் அவர்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலினை கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, அஞ்சல் / வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.
எனவே, நாளைநடைபெறவுள்ள சிறப்புமுகாமில் பொதுமக்கள் அனை வரும் பங்குபெற்று இரட்டை பதிவற்ற நூறுசதவீத தூய்மையான வாக்காளர் பட்டியலினை ஏற்படுத்து வதற்கு தங்களது முழு பங்களிப்பும் ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
- தங்களது சொத்தின் ஆவணங்களை சுபமுகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொத்துக்கான ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறையில் மாற்றியதை தொடர்ந்து பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் சுப முகூர்த்த நாளில் தங்களது சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய விரும்பி அதற்கு ஏற்றது போல் முன்பதிவு செய்து சுப முகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதனால் முகூர்த்த நாட்களில் பத்திர பதிவு செய்ய வருபவர்கள் எண்ணிக்கை மற்ற சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் புதிதாக வாங்கியுள்ள சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து நேற்று முன்தினம் காலை ஆவண பதிவுக்காக கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆனால் கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காலை இணையதள சேவை முடங்கியது.இதனால் எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவியது.
முன்பதிவு செய்து வந்திருந்த பொதுமக்கள் ஆவண பதிவுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அன்று முழுவதும் இணையதள சேவை கிடைக்காததால் எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
- வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது தெரியவந்தது.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது49).
இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் சொந்தமான இடம் களத்தூர் கிராமத்தில் உள்ளது.
இதனை அவர்கள் யாரும் இதுவரை பாகப்பிரிவினை செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரிடம், குழந்தைசாமி தன்னிச்சையாக விலை பேசி, பணி ஓய்வு பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மூலமாக போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்த தகவல்கள் அண்மையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.
தகவலின் பேரில், களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதன் மூலம் பத்திர பதிவு நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைசாமியை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.
- பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
- நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது.
அவினாசி
பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது. தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில் அவிநாசி வட்டாரத்தில் 67 சதவீத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அப்டேட் செய்துள்ளனர்.அடுத்த ஊக்கத்தொகை பெற விரைவில் தங்கள் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
- வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கன்னியக்குடி கிராமத்தில் அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சீர்காழி கார்டன் மறுவாழ்வு மையம் மற்றும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து கன்னியக்குடி கிராமத்தில் புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் இடத்தை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து இடத்தை ஆர்ஜீதப்படுத்தும் பணியை தொடக்கி வைத்தனர். பயனற்று கிடந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும் என கலெக்டர் லலிதா உறுதி அளித்தார்.
- இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம், பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா தகட்டூர் தலைஞாயிறு,அக்கிரகாரம் ஆகிய இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம் ,பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மில் ஊழியர் வீட்டில் நகை, ஆவணங்கள் திருடு போயின.
- இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விராட்டிபத்து, முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டனர்.
ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பியபோது கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.