search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Domestic Poultry Breeding"

    • ஜூலை 11 முதல் 13ந் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • முதலில் வரும் 25 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கப்படும்

    திருப்பூர்:

    திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 11-ந்தேதி தொடங்குகிறது

    திருப்பூரில் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கும் வளா்ப்பு முறைகள் தொடா்பான பயிற்சி ஜூலை 11 முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியினை பெருக்கும் வளா்ப்பு முறைகள் எனும் தலைப்பில் ஜூலை 11 முதல் 13ந் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பயிற்சியில் நாட்டுக் கோழிகளின் வகைகள், வளா்ப்பு முறைகள், நாட்டுக் கோழிகளை பாதிக்கும் நோய்கள், தீவன மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு யுக்திகள் போன்ற தலைப்புகளில் விளக்கங்களும், பண்ணை மேலாண்மைக்கும் கோழிகளின் உற்பத்தி திறனுக்குமான தொடா்பு மற்றும் இதர செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன.

    இப்பயிற்சியின் இறுதி நாளில் அருகே உள்ள பண்ணைகளுக்கு அழைத்து சென்று நேரடி செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன. முதலில் வரும் 25 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடங்கப்படும்.

    இப்பயிற்சி வகுப்புக்கு நபா் ஒருவருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். இப்பயிற்சி தொடா்பான முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணைத்தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×