search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dont participate"

    திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, மு.க ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMK #mkstalin
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்தார். இதனால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    பின்னர் சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி சம்பவம் குறித்த முதல்வரின் அறிக்கையில் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டினார்.

    மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்க முதல்வருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டுள்ளது என்றும், துப்பாக்கிச்சூடு குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.



    இதைத்தொடர்ந்து , முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை சட்டமன்ற நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்கபோவதில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMK #mkstalin
    ×