search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dowry harassment"

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
     ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகில் உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், சேத்தூர் காமராஜர்நகரைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது 10 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின் ராஜாவை கைது செய்தார். அவரது தாயார் விஜயாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை முத்தனாங் கோட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). பட்டதாரி. இவர் பேஸ்புக் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் நீண்ட நாட்களாக பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. இருவரும் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கார்த்திக் மற்றும் முத்தம்மாள் திருமணம் செய்து கொண்டனர்.

    சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.

    மேலும் கார்த்திக் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

    இது குறித்து விசாரிக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மேலூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் யோகா (வயது 29).

    இவருக்கும் மேலூர் தெற்குத்தெருவைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 22 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனாலும் அருண் மற்றும் குடும்பத்தினர் யோகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த யோகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சாத்தூரில் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    சாத்தூர் நடுச்சூரங்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரகுமார் (வயது 27) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஜெயலலிதா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    அதன்பிறகு ஜெயச்சந்திரகுமார் வேலைக்காக செங்கல்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை ஐகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில் திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வேலைக்காக செங்கல்பட்டு சென்ற கணவருக்கு அங்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தன்னிடம் பேச மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் உறவினர்கள் மூலம் பேசி, கூடுதலாக நகை, பணம் கொடுத்த பிறகும் ஜெயச்சந்திரகுமார் என்னை புறந்தள்ளுகிறார். இது பற்றி மாமனார் குருசாமி, மாமியார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயச்சந்திரகுமார் அவரது தந்தை குருசாமி, தாயார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் நள்ளியை சேர்ந்த கற்பகவள்ளி (25) என்பவர், சாத்தூர் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் க.ரெட்டியபட்டியை சேர்ந்த சங்கரகுமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை- பணம் வழங்கப்பட்டது.

    திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு எதுவும் கணவர் செல்லவில்லை. இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சங்கரகுமார், அவரது தந்தை கணேசன், தாயார் முருகேஸ்வரி, உறவினர் மலர் விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    கோவையில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்வதாக ஜெயில் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பூபதி(வயது 38). இவர் குன்னூர் கிளை சிறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா(34).

    இவர் கோவை அனைத்து மகளிர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், பூபதிக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 11 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை எனது பெற்றோர் கொடுத்தனர்.

    எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நாங்கள் பிரிந்து வாழ்ந்தோம். வரதட்சணை கொடுமை தொடர்பாக நான் போலீசில் புகார் செய்தேன். இந்த வழக்கில் கோர்ட்டில் எங்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். அதன்பின்னர் நானும், எனது கணவரும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

    இந்நிலையில் நான் இரண்டாவது கர்ப்பம் அடைந்துள்ளேன். தற்போது எனது கணவர் மீண்டும் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்.

    மேலும் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி என்னை தாக்கி சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    புகாரின்பேரில் பூபதி மீது வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 25) எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    அப்போது 32 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காளி ராஜ், ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ் காரராக உள்ளார்.

    இந்த நிலையில் திருமங் கலம் அனைத்து மகளிர் போலீசில் தேன்மொழி கொடுத்துள்ள புகாரில் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

    அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வகுமாரி விசாரணை நடத்தி காளிராஜ், அவரது பெற்றோர் காளியப் பன்-ஈரக்கா, உறவினர் கள் சுந்தர், சுந்தரி, செல்லம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    கூடுதல் வரதட்சணை கேட்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவன், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கீழக்கரை:

    கீழக்கரை தெற்கு தெரு காசீம் மரைக்காயர் மகள் ஜென்னத்துல் குர்ஜித் (வயது 23). இவர் அனைத்து மகளிர் போலீசில் ஒருபுகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனக்கும், கீழக்கரை ஹபீப் முகம்மது மகன் சேக் உமர் சாதிக் என்பவருக்கும் 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் கேட்டபடி சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன.

    திருமணம் முடிந்ததும் சேக் உமர் சாதிக் என்னை சிங்கப்பூர் அழைத்து சென்றார். பின்னர் பிரசவத்திற்காக எனது தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது கூடுதலாக ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் யமுனா விசாரணை நடத்தி சேக்உமர் சாதிக், அவரது தாயார் ரபீசர் பேகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
    வரதட்சணை கொடுமையால் பெண் இறந்த வழக்கில் கணவர், மாமியார் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி குளிச்சோலை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற பாபு (வயது 42), தோட்ட உரிமையாளர். இவருக்கும், மஞ்சுளா என்பவருக்கும் திருமணமாகி தீரன் என்ற மகன் உள்ளார். தற்போது தீரனுக்கு 9 வயதாகிறது.

    கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் 23–ந் தேதி ஊட்டியில் ரோஸ்மவுண்ட் பகுதியில் பாபுவின் வீட்டில் மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக மஞ்சுளாவின் தந்தை மாரிச்சாமி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் பாபு, மாமியார் உமாதேவி (62), அவரது மகள்கள் கவிதா (41), சங்கீதா (37) ஆகியோர் துன்புறுத்தியதால் இறந்தார் என்றும் ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 5 ஆண்டாக நடந்து வந்த வரதட்சணை கொடுமையால் இளம்பெண் இறந்த வழக்கில் நேற்று இரவு நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார். அதில் பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.80 ஆயிரம் அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து பாபு உள்பட 4 பேரும் ஜாமீன் வழங்கும்படி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் பெற்றதும் 4 பேரும் கோர்ட்டின் பின்பக்கம் வழியாக சென்று அங்கு தயார் நிலையில் இருந்த காரில் ஏறி சென்று விட்டனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முன்பு கார்களில் உறவினர்கள், வக்கீல்கள் திரண்டு இருந்தனர்.

    வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி(வயது 29). இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட முனுசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    வலங்கைமான் அருகே வரதட்சணை கொடுமையால் விஷத்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி தெற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகள் புவனேஸ்வரி (வயது32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா(42) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இளையராஜா, மனைவி புவனேஸ்வரியிடம் உனது பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளையராஜா, புவனேஸ்வரியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி விஷத்தை தின்று மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×