search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Arif Alvi"

    பாகிஸ்தானின் 13-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்க உள்ளார். #PakistanPresident #DrArifAlvi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி (வயது 69) வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். இதையடுத்து புதிய அதிபர் பதவி ஏற்புக்கான நடைமுறைகள் தொடங்கின.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் 13-வது அதிபராக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்க உள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.



    இதற்கிடையே தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு அதிபர் மாளிகையில் நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மம்னூன் உசேன், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த திருப்தியுடன் விடைபெறுவதாக கூறினார். தனது பதவிக்காலத்தில் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். #PakistanPresident #DrArifAlvi
    பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் இம்ரான் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார். #Pakistanpresidential #DrArifAlvi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 9-ம் தேதியுடன் நிறைவடைவதால் அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறறது.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டார்.

    பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் மற்றும் ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த 430 உறுப்பினர்கள் மற்றும் மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை நிறைவடைந்தது. பாராளுமன்றத்தில் பதிவான 430 வாக்குகளில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளை பெற்றார். மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும், ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகளையும் பெற்றனர்.

    பலுசிஸ்தான் மாகாண சட்டசபை உறுப்பினர்கள் 60 பேரில் 45 பேர் ஆல்விக்கு ஆதரவாக வாக்களித்தனர். சிந்து மாகாண சட்டசபை உறுப்பினர்களில் 56 பேர் ஆல்விக்கு ஆதரவாகவும், 100 பேர் ஐட்ஜாஸ் அஹ்ஸனுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

    கைபர் பகதுங்கவா மாகாண சட்டசபை உறுப்பினர்களில் 78 பேர் ஆல்விக்கு ஆதரவாகவும், 26 பேர் ஐட்ஜாஸ் அஹ்ஸனுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

    இதைதொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் 13-வது அதிபராக ஆசிப் ஆல்வி விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. #Pakistanpresidential #DrArifAlvi #ArifAlvi
    ×