என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dri seized
நீங்கள் தேடியது "dri seized"
ஐதராபாத் விமான நிலையத்தில் இன்று ஒரு பெண்ணிடம் ரூ.3.6 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.1.5 கோடி வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஐதராபாத்:
வெளிநாடுகளில் இருந்து ரகசியமாக தங்கம் கடத்தி வருவது நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று பயணிகள் உடமைகளை பரிசோதனை செய்த அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கிய ஒரு பெண்ணின் நடத்தை சந்தேகத்துக்கிடமான முறையில் இருப்பதை கண்டனர்.
அவர் கொண்டு வந்திருந்த உடைமைகளை தீவிரமாக பரிசோதித்தபோது சுமார் ரூ.3.6 கோடி மதிப்பிலான 11.1 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் அவர் வாடகைக்கு எடுத்திருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை அவர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கோடி மதிப்பிலான தங்கமும் வெளிநாட்டுப் பணமும் அவருக்கு எப்படி கிடைத்தது? யாருக்காக இவற்றை கொண்டு வந்தார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ரூ.1.82 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கடத்தல் தங்கத்தை நெல்லூர் மாவட்டத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #goldbiscuitsseized
ஐதராபாத்:
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கசமூர் தர்கா அருகேயுள்ள வெங்கடாசலம் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்களை போலீசார் துணையுடன் வருவாய்துறை அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு காரில் 5 கிலோ 700 கிராம் எடையுள்ள 58 தங்க பிஸ்கட்கள் மறைத்து கடத்தப்படுவதை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டு முத்திரையுடன் இருக்கும் அந்த தங்க பிஸ்கட்களின் மதிப்பு சுமார் 1.82 கோடி ரூபாய் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #goldbiscuitsseized
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X