search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drill"

    உத்தரகாண்ட் மாநிலத்தின் சவுபாட்டியா காட்டுப்பகுதியில் 14 நாட்களாக நடைபெற்றுவந்த இந்தியா - அமெரிக்கா கூட்டுப் போர் பயிற்சி இன்றுடன் நிறைவடைந்தது. #YudhAbhyasconcludes
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அடர்த்தியான காட்டுப்பகுதிகளை ஒட்டியுள்ள சவுபாட்டியா மலையடிவாரத்தில் இந்தியா - அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த கூட்டுப் படைகள் கடந்த 16-ம் தேதியில் இருந்து கடுமையான போர் பயிற்சி மேற்கொண்டு வந்தன. 

    கடந்த 2004-ம் ஆண்டில் இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ‘யுத் அப்யாஸ்’ ஒப்பந்தத்தின்படி நான்காவது முறையாக நடைபெற்ற இந்த போர் பயிற்சியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒன்றாவது பட்டாலியன் படைப்பிரிவு வீரர்களும், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 23-வது பட்டாலியன் படைப்பிரிவு வீரர்களும் பங்கேற்றனர்.

    தற்போது நடைபெற்ற யுத் அப்யாஸ்-2018’ பயிற்சியின்போது மறைந்திருந்து தாக்குதல், மலையேற்றம் போன்ற பல்வேறு கடுமையான பயிற்சிகளை இருநாட்டு வீரர்களும் மேற்கொண்டனர். மலைகளின் மீதேறி எதிரிப் படைகளின் பதுங்குக்குழிகளை அழிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

    அமெரிக்க ராணுவ மேஜர் வில்லியம் கிரஹாம் மற்றும் இந்தியாவின் மேஜர் ஜெனரல் கபீந்திரசிங் உள்ளிட்டோர் இந்தப் பயிற்சிகளை பார்வையிட்டு வந்தனர்.

    இந்நிலையில், 14 நாட்களாக நடைபெற்றுவந்த கூட்டுப் போர் பயிற்சி இன்று (சனிக்கிழமை) நிறைவடைந்தது.  #YudhAbhyasconcludes
    ×