search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water pipe damage"

    தவுட்டுப்பாளையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர் சீரமைக்கப்படுமா? என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேலாயுதம்பாளை­யம்:

    கரூர் மாவட்டம், புகளுர்,வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், சுற்று வட்டார பகுதி பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து குடிநீர் குழாய் போடப்பட்டது. இதில் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தவுட்டுப்பாளையம் - பாலத்துறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற் கூடம் பின்புறம் செல்லும் குடிநீர் குழாய்பழுதடைந்து உடைந்து குடிநீர் குழாயிலிருந்து ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் குழாய் சேதமடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வருகிறது.

    கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பொது மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் குடிநீர் தேவையற்ற முறையில் வீணாகி வருகிறது. இதனால் பொது மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து வீணாகிவரும் குடிநீரை தடுக்க வேண்டும் என தவுட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×