search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water supply work started"

    • குழாய்களை சீரமைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் குழாய்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட தென்பழனி காலனி, நேருஜிநகர் ஆகிய கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்க ப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேத மடைந்து மண்ணில் புதைந்தது.

    இதனால் கடந்த 3 நாட்களாக இரண்டு கிராம மக்களும் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குழாய்களை சீரமைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் குழாய்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதை யடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கையாக கரட்டுப்பட்டி அருகே ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றில் புதிய மின் மோட்டார் மற்றும் குழா ய்கள் அமைத்து இரண்டு கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கினர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி, வார்டு உறுப்பினர் மணி ஆகியோர் பார்வை யிட்டனர். இரண்டு நாட்க ளாக குடிநீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது ஊராட்சி நிர்வா கத்தின் துரித நடவடிக்கைக்கு கிராம பொதுமக்கள் பாரா ட்டுகளை தெரிவித்தனர்.

    ×