search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrest"

    • 2 லாரி பறிமுதல்
    • 7 யூனிட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    கோவை:

    மதுக்கரை வட்டம் ஒத்தகால்மண்டபம் வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் மதுக்கரை நாச்சிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் மணல் அனுமதி இல்லாமல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கலை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரை பிடித்து, மணல் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோன்று கோவை மாவட்ட சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் வாளையார் சோதனை சாவடி அருகே ஆய்வு செய்தனர்.அப்போது அந்த வழியாக வந்த கேரளா லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 7 யூனிட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு வருவாய் ஆய்வாளர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவரை பிடித்து கே.ஜி.சாவடி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சோனு (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரில் வசித்து வந்தவர் உமேந்தர்(வயது33). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் உமேந்தர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். மாலையில் அவர்கள் மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஓலா அப் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    வணிக வளாகம் முன்பு கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ரவியை கைது செய்தனர்.

    இவரது சொந்த ஊர் சேலம் ஆத்தூர் ஆகும். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    உமேந்தர் தன்னுடன் வந்த மனைவியின் அக்காள் தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து காரை முன்பதிவு செய்து இருந்தார். காரில் அனைவரும் ஏறியதும் டிரைவர் ரவி ஓ.டி.பி எண்ணை கேட்டு அவசரப்படுத்தினார்.

    அப்போது உமேந்தர் தனது செல்போனில் ஓ.டி.பி எண்ணை தேடி தடுமாறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த டிரைவர் ரவி கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் சவாரியை கேன்சல் செய்யும்படி கூறிவிட்டு காரில் இருந்து இறங்கினர். அப்போது காரின் கதவை உமேந்தர் வேகமாக மூடியதாக கூறப்படுகிறது.

    இதனால் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உமேந்தர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் தாக்க முயன்றபோது தடுத்த டிரைவர் ரவி தனது கையில் இருந்த செல்போனால் அவரது தலையில் காது ஓரத்தில் பலமாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த உமேந்தர் கீழே விழுந்ததும் அவரது மார்பில் பலமுறை எட்டி உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த உமேந்தர் இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    மனைவி, குழந்தைகள் கண்முன்பே உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டு அவர்கள் துடித்து போய் உள்ளனர்.

    சாதாரண வாக்குவாதத்தில் ஆத்திரம் கண்ணை மறைத்ததால் இந்த கொலை நடந்து உள்ளது. இதனால் என்ஜினீயரின் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது.

    • தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர்.
    • அப்போது டிரைவரான ரவி ‘ஓ.டி.பி.’ எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உமேந்தர் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து வருவது வழக்கம்.

    நேற்று காலை உமேந்தர் தனது குடும்பத்துடன் வாடகை காரில் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவர்களுடன் உறவினரான தேவிபிரியாவும் சென்று இருந்தார். அவர்கள் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொழுது போக்கு மையத்தில் இருக்கும் தியேட்டரில் படம் பார்த்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர். அப்போது டிரைவரான ரவி 'ஓ.டி.பி.' எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த உமேந்தரும், அவரது குடும்பத்தினரும் காரை விட்டு இறங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் ரவி சரமாரியாக உமேந்தரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் உயிருக்கு போராடிய உமேந்தரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் கார் டிரைவர் ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத்தினர் முன்பே என்ஜினீயர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகன் சரத்குமார் (வயது25). மினி வேன் டிரைவராக உள்ளார். இவரது வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் சம்பவத்தன்று தீ வைத்து சென்றனர்.

    இவரது வீட்டிற்கு எதிரில் பழனியப்பன் மகன் மணிராஜன் (28) என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை பார்க்கும் இவர்தான் தனது வைக்கோல் போருக்கு தீ வைத்ததாக சரத்குமார் சந்தேகப்பட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் நேற்று மணிராஜனை அரிவாளால் சரத்குமார் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மடிப்பாக்கம் அருகே 3 கிலோ கஞ்சாவுடன் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்கட்டளை காந்திநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது37). ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவரது அட்டோவை நிறுத்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    அரக்கோணம் அருகே மணல் கடத்திய டிராக்டர் மோதி தந்தை மகன் பலியானதையடுத்து டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள பள்ளூர் காலனியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35) கூலி தொழிலாளி. இவருக்கு ஆகாஷ் (7), தினேஷ் (5). 2 மகன்கள் உள்ளனர். 3 பேரும் நேற்று இரவு பள்ளூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஜினி மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். ஆகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனையடுத்து டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தகவலறிந்த ரஜினியின் உறவினர்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.விஜயகுமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இந்த பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது இதன் காரணமாக பல உயிர்சேதம் ஏற்படுகிறது.

    எனவே மணல் கடத்தலை தடுத்து ரஜி சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

    விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ராஜேஷ் (30) மற்றும் டிரைவர் சதீஷ் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலை கொடுக்க மறுத்ததால் கண்டெய்னர் லாரியை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் மஸ்தான் கோயில் பகுதியில் ஆஞ்சநேயா டிரான்ஸ் போர்ட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த தாவீது ராஜா. லாரி டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

    அடிக்கடி மது போதையுடன் லாரியை ஓட்டியதால் அவரை உரிமையாளர் வேலையை விட்டு நீக்கி உள்ளார்

    இதனால் மனமுடைந்து அப்பகுதியை சுற்றிதிரிந்து வந்த தாவீது ராஜா நேற்று இரவு மது போதையில் டிரான்ஸ்போர்ட் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார்.

    இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதுகுறித்து மாதவரம் ரெட்டேரி பகுதியில் வாகன சோதனையில் இருந்த போலீசார் நள்ளிரவு லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் இருந்த தாவீது ராஜா தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியை மீட்டு தப்பி ஓடிய ராஜாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் சுற்றி திரிந்த தாவீது ராஜாவை திருவொற்றியூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் வேலை கொடுக்க மறுத்ததால் பழி வாங்க எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் சாலை புதுசத்திரம் அருகே ஒட்டன் சத்திரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோபிகிருஷ்ணன் குருமூர்த்தி மற்றும்காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது மணப்பாறை வெயிலடிச்சான்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மோகன்( 21)என்பவர் எவ்வித அரசு அனுமதியுமின்றி விராலிமலையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் மணல் ஏற்றி வந்த லாரியை கைப்பற்றி டிரைவர் மோகனையும் கைது செய்தனர்.
    கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாக போலீசாரை தரக்குறைவாக பேசி இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் (வயது 25) என்பவர் கடந்த 25-ந்தேதி சென்னையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ராஜேஷ் வீடியோ பதிவு செய்திருந்தார். இது இணையதளத்தில் பரவியது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இணைய தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பேசிய ஒரு வாலிபர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாகவும் போலீசாரை தரக்குறைவாகவும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் செந்தில் (23) என்பவர்தான் போலீசாரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இவர் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 474 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் சென்னை கல்லடிப்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 38) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே 16 வயதுடைய சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    அப்போது இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் பிரகாஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிரகாஷ் கோவையில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மாயமாகி பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், எனது மகளை கடத்தி சென்று ஆசைவார்த்தை கூறி பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
    மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜே.சி.பி. டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த திருமல்வாடி அருகே உள்ள கீழ்சீங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30), ஜே.சி.பி. டிரைவர்.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரம் 18-ந் தேதி பெல்லுஹள்ளியை சேர்ந்த வாய் பேச முடியாத, பூ கட்டும் தொழில் செய்து வந்த 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில், பென்னாகரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    நேற்று இந்த வழக்கில் நீதிபதி (பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பு வழங்கினார். மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். ஒரு மாதத்திற்குள் அபராதம் கட்ட தவறினால், அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி ஜீவானந்தம் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் உமா மகேஸ்வரி ஆஜரானார். #tamilnews
    ×