search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrest"

    ஆரணி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த சிறுமூர் வடக்கு கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் அருள்மணி விவசாயி. இவரது மனைவி கனகா இவர்களுக்கு பவஸ்ரீ (வயது6), தாரகேஸ்வரன் (3).என்ற மகள் மகன் உள்ளனர்.

    பவஸ்ரீ ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளியில் இருந்து தினமும் வீட்டிற்கு வேன் வந்து பவஸ்ரீயை அழைத்து செல்வது வழக்கம். இன்று காலை பள்ளிவேன் மாணவி வீட்டிற்கு வந்து நின்றது. கனகா தனது மகள் பவஸ்ரீயை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டிலிருந்த 3 வயது குழந்தை தாரகேஸ்வரன் வீட்டைவிட்டு வெளியே வந்து வேனின் முன்பக்க சக்கரத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தான். இதனை கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கினார். அப்போது குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தது.

    அவனது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் குழந்தையை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வேன் டிரைவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    புதுவையில் கணவன், மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PuducherryMurder
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்த வக்கீல் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65).

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் வசித்து இருக்கும் நிலையில், கணவன் - மனைவி மட்டும் தனியாக புதுவை வீட்டில் வசித்து வந்தனர். பாலகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்பந்தி ஆவார்.

    நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவன் - மனைவி இருவரையும் கொலை செய்து விட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது பற்றி உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    மேலும் கொலையை கண்டு பிடிக்க அதிரடிப் படையின் உதவியும் நாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசார் தனியாக விசாரித்தார்கள்.

    பாலகிருஷ்ணன் வீட்டுக்கு யார்- யார் அடிக்கடி வந்து செல்வார்கள் என்ற விவரங்களையும், வீட்டில் வேலை பார்ப்பவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். அதன்படி விசாரணை நடைபெற்றது.

    பாலகிருஷ்ணன் சொந்தமாக கார் வைத்துள்ளார். இந்த காரை தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர்தான் ஓட்டுவது வழக்கம்.

    தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர் வர முடியாத நேரத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது காசிம் என்பவர் டிரைவராக வருவார்.

    கடந்த 4 மாதமாக தொடர்ந்து முகமது காசிம் தான் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதிரடிப்படை போலீசார் முதலில் தேனீ.ஜெயக் குமாரின் டிரைவரை அழைத்து விசாரித்தனர்.

    அடுத்ததாக முகமது காசிமை விசாரிப்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். அவருடைய செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    எனவே, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய செல்போன் கடந்த 2 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் நடமாடி உள்ளது என்பதை செல்போன் நிறுவனம் மூலம் திரட்டினார்கள்.

    நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரமாக கொலை நடந்த பகுதியில் அந்த செல்போன் நடமாட்டம் இருந்தது தெரிந்தது.

    எனவே, போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர் யார்- யாருடன் இந்த 2 நாட்களும் போனில் பேசினார் என்றும் விசாரித்தனர்.

    அப்போது கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. எனவே, அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே, அவருடைய நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்தனர்.

    இதற்கிடையே முகமது காசிம் வேரு ஒரு காரில் டிரைவர் பணிக்காக சென்னை சென்று இருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் வருகைக்காக போலீசார் ரகசியமாக காத்து இருந்தனர்.

    அவர் காரில் சென்னையில் இருந்து திரும்பி வந்தார். உடனே டிரைவர் முகமது காசிமை சுற்றி வளைத்த போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

    முதலில் கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். போலீசார் விசாரணையின் யுக்தியை மாற்றி கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர்.

    அப்போது நான்தான் கொலை செய்தேன் என்று முகமது காசிம் ஒத்துக் கொண்டார். அவரது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    முகமது இலியாஸ் கோட்டக்குப்பத்தில் கோழிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

    பாலகிருஷ்ணன் வீட்டுக்கு டிரைவராக வந்த முகமது காசிம் அந்த வீட்டில் உள்ள வசதியான நிலையை பார்த்து ஏராளமான பணம் - நகைகள் இருக்கும் என்று கருதி உள்ளார்.

    எனவே, அவற்றை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது சம்பந்தமாக நண்பர் முகமது இலியாசிடம் கூறினார். அவரும் இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி நேற்றுமுன் தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவரும் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தனர். அருகில் காலி மனையில் உள்ள மா மரம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றனர்.

    முகமது காசிம் ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் நாய் அவரை பார்த்து குரைக்கவில்லை. இதனால் 2 பேரும் உள்ளே சென்றனர்.

    பாலகிருஷ்ணன் வீட்டில் உள்ள படுக்கை கிழிந்து இருந்தது. இதை தைப்பதற்கு ஆள் வேண்டும் என்று ஏற்கனவே பாலகிருஷ்ணன் முகமது காசிமிடம் கூறி இருந்தார்.

    எனவே, முகமது இலியாசை படுக்கையை தைப்பதற்காக வந்த தொழிலாளி என்று பாலகிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார்.

    எனவே, இருவரையும் படுக்கை அறைக்குள் அனுமதித்தனர். அங்கு கணவன் - மனைவி இருவரும் சென்று படுக்கையை எப்படி தைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.

    இந்த நேரத்தில் முகமது காசிம் படுக்கை கதவை திடீரென பூட்டினார். பின்னர் கணவன் -மனைவி இருவரையும் அந்த 2 பேரும் அடித்து உதைத்து நகை- பணம் எங்கே இருக்கிறது? என்று கேட்டனர்.

    அதற்கு நகை- பணம் எதுவும் பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த அவர்கள் கணவன் - மனைவி இருவரையும் சித்ரவதை செய்தனர்.

    பின்னர் அவர்களை கழுத்தை இறுக்கியும், காலால் கழுத்து மற்றும் மார்பில் மிதித்தும் கொலை செய்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோ, அலமாரி அனைத்திலும் பணம்- நகை இருக்கிறதா? என தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் அதிக நகை - பணம் எதுவும் கிடைக்கவில்லை.

    ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் பணம், சில ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுகள், சில வெள்ளி பொருட்கள் ஆகியவை மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது.

    அதன் பிறகு ஹேமலதா கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவற்றையும் எடுத்து கொண்டனர்.

    11.30 மணிக்கு உள்ளே வந்த அவர்கள் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருந்து வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள்.

    இடையில் சமையல் அறைக்கு சென்று டீ தயாரித்து குடித்தனர். அறைக்குள்ளேயே ஆங்காங்கே சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தினார்கள்.

    பின்னர் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றனர். இரவு இருவரும் புதுவையில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தனர். கொள்ளையடித்த பொருட்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்தனர்.

    மறுநாள் காலை (நேற்று) இருவரும் வழக்கம் போல் தங்கள் பணிக்கு சென்றனர். ஆனால், போலீசார் துப்பு துலக்கி இருவரையும் கைது செய்து விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கொலை நடந்த தகவல் தெரிந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால் போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள். #PuducherryMurder
    மாதவரம் அருகே திருமணம் செய்தவதாக கூறி பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    மாதவரம் பால்பண்ணை மாத்தூர் இடைமா நகரைச் சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி பெண்ணும், கொசப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டிரைவர் அசோகனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் மாதவரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அசோகன் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி இருந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குபதிவு செய்து அசோகனை கைது செய்தார். #tamilnews
    பூந்தமல்லி அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி முத்துக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது56). இவர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவர் பூந்தமல்லி-பெங்களூர் நெடுஞ்சாலை பாப்பான் சத்திரம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அவர் சாலையை கடந்த போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது காலில் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது.

    படுகாயம் அடைந்த அவரை ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது கால் துண்டிக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சங்கரன் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் அந்தோணி கைது செய்யப்பட்டார். #tamilnews
    சேலம் அருகே ஓடும் கல்லூரி பஸ்சில் மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இம்மாணவி கல்லூரிக்கு தினமும் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் செல்வது வழக்கம். இந்த பஸ்சின் டிரைவராக எடப்பாடி தாலுகா அடையூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 31) என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து புறப்பட்டு கல்லூரிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பின்னர் மாலையில் அதே பஸ்சில் திரும்பி வந்தபோது அந்த மாணவியை டிரைவர் வெங்கடாசலம் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவி வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று டிரைவர் வெங்கடாசலம் மீது புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சம்பந்தப்பட்ட டிரைவர் வெங்கடாசலத்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர், கல்லூரி விடுமுறை நாட்களில் வெளியூருக்கு சென்று பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வந்ததும், சம்பவத்தன்று மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ஓடும் கல்லூரி பஸ்சில் கல்லூரி மாணவி சில்மி‌ஷம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகிரி அருகே நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகிரி:

    புளியங்குடி நீர்பாய்ச்சிமாறன் தேருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது வயல் நடுவை வேலைக்கு ஆட்கள் அழைத்துவர நேற்று இரவு சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி பகுதிக்கு சென்றார்.

    பின்னர் ஊர் திரும்புவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார், பலியான கிருஷ்ணன் உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஹரீஷ் (54) என்பவரை கைது செய்தனர்.

    நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மாதவரம் அருகே பெண் பலியான வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    ஆவடி அழகர்சாமி தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ். இவரது மனைவி மோனிஷா. இவர்கள் மோட்டார் சைக்கிளில் மணலி நோக்கி சென்ற போது மாதவரத்தில் கண்டெய்னர் லாரி மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோனிஷா பலியானார்.

    இது குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் தப்பிய லாரி டிரைவரை தேடி வந்தனர். மாதவரம் ஜங்‌ஷனில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கண்டெய்னர் லாரியை கண்டு பிடித்தனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய ஊத்தங்கரையை சேர்ந்த டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.

    விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும்பொருட்டு விழுப்புரத்தில் பல்வேறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் கோட்டக் குப்பம் சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 6 அட்டை பெட்டிகள் இருந்தன. அதை திறந்து பார்த்தபோது புதுவையில் இருந்து கடத்தி வந்த 712 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுவை மாநிலம் ருத்ராபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) என்பதும், அவர் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை காரில் கடத்தி செல்வதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீசாரிடம் ஒப் படைத்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கார் டிரைவர் ராமச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற பகுதியில் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த போல் இருந்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் தூங்கிய நபரை எழுப்புவதற்கு காரின் அருகே சென்றனர்.

    ஆனால் இருக்கையில் எந்த நபரும் தூங்கவில்லை. அதற்கு மாறாக தலையணையை அடுக்கி வைத்து, ஒருவர் தூங்குவது போல் தோற்றம் ஏற்படுத்தி இருந்தது தெரிந்தது. இதனால் உஷாரான போலீசார் அதனை அகற்றி பார்த்தபோது அட்டைப் பெட்டி முழுவதும் மதுபாட்டில்கள் இருந்தது.

    இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் டிரைவரை மது விலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் மதுரை பழங்காநத்தம் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் 160 மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மணிகண்டனை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2,880 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்துள்ளனர்.
    சீர்காழி:

    காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், சிவக்குமார், ஸ்டாலின் மற்றும் போலீசார் சீர்காழி அருகே சூரக்காடு முக்கூட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 60 அட்டை பெட்டிகளில் 2,880 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர், காரைக்கால் மாவட்டம் ராயல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் சந்தோஷ் (வயது 28) என்பதும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை சீர்காழி அருகே உள்ள புத்தூருக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சந்தோசை கைது செய்தனர். மேலும் போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    அன்னவாசல் அருகே அனுமதி இன்றி மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் குடுமியான்மலையை அடுத்த அண்ணாபண்ணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த டிரைவர் கன்னியாகுமரியை சேர்ந்த சுசீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேடசந்தூரில் மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தங்கை கண்முன்னே பள்ளி மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். பூ வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் முகமது ரபீக் (வயது15). வேடசந்தூரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அவரது மகள் மும்தா பேகம் (14). அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இன்று காலை முகமது ரபீக் தனது தங்கையுடன் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தான். ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் சென்ற போது அந்த வழியாக பால் வேன் வந்தது. கண்ணி மைக்கும் நேரத்தில் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் முகமது ரபீக் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் தங்கை மும்தா பேகம் கதறி துடித்தார்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவன் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினை ஏற்படுத்திய வேன் டிரைவர் பிரின்ஸ் பிரபாகரனை கைது செய்தனர். #tamilnews
    ×