search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver license revoked"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து தடுப்பில் கார் திடீரென நின்றது.
    • ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூ-டியூப்பரான இவர் தனது சேனலில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். அதன் மூலமாக கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமானார். இவரது யூ-டியூப் சேனலை 1.6 மில்லியல் சந்தாதாரர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சஞ்சு டெக்கி, நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று தனது காரில் நீச்சல் குளம் போன்று அமைத்தார். அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே காரை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த காட்சியை தனது யூ-டியூப் சேனலில் நேரலையில் பகிர்ந்தார்.

    அப்போது போக்குவரத்து தடுப்பில் கார் திடீரென நின்றது. இதனால் காருக்குள் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் கசிந்து, என்ஜினுக்குள் புகுந்திருக்கிறது. இதனால் காரின் பக்கவாட்டில் இருந்த ஏர்பேக் வெடித்தது. இதையடுத்து காருக்குள் இருந்த தண்ணீரை சாலையில் திறந்துவிட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சஞ்சு டெக்கி காரில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் குளித்த காட்சிகளை நேரலையில் பகிர்ந்த படி இருந்ததால், அதன்மூலமாக ஏற்பட்ட பாதிப்புகளும் அதில் வெளியாகின. இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். இதுகுறித்து ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது.

    தனது மீது நடவடிக்கை பாயும் என்று அறிந்த சஞ்சு டெக்கி தனது காரை கொல்லத்துக்கு ஓட்டிச்சென்றார். அதனையறிந்த போக்குவரத்து துறை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சஞ்சு டெக்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அவர் மீது ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    ×