search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver"

    திருக்குறுங்குடி அருகே கொடைவிழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் சுரேஷ் என்பவரை வாலிபர் தாக்கினார்.
    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது23). டிரைவர்.
    சம்பவத்தன்று இரவில் இவர் மலையடிபுதூரில் உள்ள மாடசாமி கோவில் கொடை விழாவிற்கு சென்றார்.

    அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த  இசக்கிப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிப்பாண்டி சுரேஷை அவதூறாக பேசி, தாக்கினார்.

    இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ்  குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.

    குப்பாண்டபாளையம்  பஸ் நிறுத்தம் அருகே  ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம்  (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.

     பின்னர் சுந்தரம்  அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். 

    இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை. 

    இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம்  அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
    செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    புவனேஸ்வர் :

    ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார்.

    அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து கஜேந்திரா ஸ்வைனை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டி ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள், பின்னர் அவிழ்த்து விட்டனர்.

    ஆனால் இந்த அதிர்ச்சி மற்றும் காயம் போன்றவற்றால் அவரால் பின்னர் எழுந்திருக்கவும் முடியவில்லை. இதற்கிடையே லாரி டிரைவர்களின் இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    மதுரை அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை

    மதுரை மருதங்குளத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 45). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரை அதேபகுதியில் வசிக்கும் சிலர் ஆட்டோ சவாரிக்கு அழைத்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் அவர்களுக்கும், ஹரீஹரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஹரிகரன் நேற்றுமாலை ஆழ்வார்புரம் ஆட்டோ நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டது. இதில் ஹரிஹரனுக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டது. 

    இதுபற்றி ஹரிகரன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியந்தோப்பு, கோனார் மண்டபம் கார்த்திக் (28), மதிச்சியம் அழகர் மகன் அழகுபாண்டி (23), ஆழ்வார்புரம் சதாம் உசேன் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

    இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ஹரிஹரனை தாக்கி ஆட்டோவை அடித்து உடைத்ததாக கார்த்திக், அழகுபாண்டி, சதாம்உசேன் ஆகிய 3 பேரையும் மதிச்சியம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபா பலியானார்.
    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள நாகல்குளம் கீழ தெருவை சேர்ந்தவர் ராஜகுட்டி(வயது 34). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலன்குளம் அம்மன்கோவில் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராஜகுட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோபிசெட்டிபாளையம் அருகே லாரி டிரைவர் உடல் நலம் சரியில்லாத காணத்தால் திடிரென மயங்கி விழந்தார். . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என். பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (49). ஆப்பக்கூ டலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி.

    கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 3 மாதத்திலேயே ஜெயகுமார் மனைவியை விட்டு பிரிந்து வசித்து வருகிறார். மேலும் ஜெயக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையம், திருவள்ளுவர் வீதியில் உள்ள ஒரு வேப்பமரத்தடியில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் ஜெயகுமார் சரிவர சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    • கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    • வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
    • அரசு பஸ்சை டிரைவர் கட்டி பிடித்து அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது. ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் மோதி டிரைவர் பலியானார்.
    • வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது36). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு பீரோ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு வாடிப்பட்டிக்கு வரும் டவுன் பஸ்சில் பயணம் செய்து வடுகபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார்.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
    • வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் கௌதம் (25) என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வருகின்றார். கௌதம் நேற்று இரவு முத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள்கௌதமை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பார்த்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 3 பேரும் வேனில் வேதாரண்யம் நோக்கி சென்றனர்.
    • லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 39).

    அதே பகுதியை சேர்ந்த பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேரும் லோடு வேனில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வேனை செந்தில் ஓட்டினார்.

    அப்போது வேதாரண்யம் சாலையில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் செந்தில், பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பிரபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
    • தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

    இது தொடர்பாக வீரகனூர் அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை.

    இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி, சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்தை கைது செய்து ெஜயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த கார் டிரைவர் தற்போது தான் கைது செய்து இருக்கும் சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×