search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driving Licence In Saudi Arabia"

    சவுதி அரேபியாவில் கார் ஓட்ட டிரைவிங் லைசென்சு (உரிமம்) பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார். இவர் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவராவார். #SaudiWomenDriving
    பக்ரைன்:

    சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார்.

    ஊழலற்ற ஆட்சிக்காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை.



    ஆனால் இவர் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கினார். அத்துடன் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவும் ஒப்புதல் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட டிரைவிங் லைசென்சு (உரிமம்) பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார்.

    இவர் ஏற்கனவே இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

    இளவரசர் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் டிரைவர் பணிக்காக சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெறுகின்றனர்.  #SaudiWomenDriving


    ×