search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drugs war"

    17 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கில் போலீசார் 3 பேருக்கு தலா 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து பிலிப்பைன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. #PhilippinesPolice #StudentMurder #DrugsWar
    மணிலா:

    ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் பிற நாடுகளை காட்டிலும் அதிக அளவில் போதை பொருள் புழங்குகிறது. எனவே போதைப்பொருளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கடுமையான போக்கை கையாண்டு வருகிறார்.

    அந்த வகையில் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கும் நபர்களை பார்த்த இடத்தில் சுட்டு கொல்லும் அதிகாரத்தை போலீசாருக்கு அவர் வழங்கி உள்ளார். அதன்படி 2016-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 5000 பேர் போலீசாரின் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார்.

    ஆனால் இது முற்றிலும் மனித நேயமற்ற செயல் என்றும் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்படும் போர் என்றும் மனித உரிமை அமைப்புகள் சாடின. அதிபர் ரோட்ரி கோ துதர்தே மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு போதை பொருள் விவகாரத்தில் கியான் டெலோஸ் சாண்டோஸ் என்கிற 17 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரிய அளவிலான போராட்டத்துக்கு வித்திட்டது.

    அதன் எதிரொலியாக சிறுவனை சுட்டுக்கொன்ற 3 போலீசார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் 3 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.

    இதையடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.  #PhilippinesPolice #StudentMurder #DrugsWar
    ×