search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunken youth"

    • குடி போதையில் வந்த கும்பல் உணவு சரியில்லை என கூறி சாப்பாடு தட்டை வீசி தகராறு செய்துள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் (வயது 37). இவர் மில்லர் பஸ் நிறுத்தம் அருகே தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த கடையில் அவருக்கு உதவியாக அவரது சகோதரர் இதயத்துல்லா (35) என்பவரும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தள்ளுவண்டி கடையில் ஏராளமானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்தது.

    குடி போதையில் வந்த கும்பல் சுல்தான் மற்றும் இதயத்துல்லாவிடம் உணவு சரியில்லை என கூறி சாப்பாடு தட்டை வீசி தகராறு செய்துள்ளனர். இதனை சுல்தான் மற்றும் இதயதுல்லா ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுல்தான் மற்றும் இதயத்துல்லா இருவரையும் கத்தியால் குத்தியும், வெட்டியும் அடித்து உதைத்து தாக்கவும் செய்துள்ளனர். இதனால் வலியால் அவர்கள் அலறி துடித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அதற்குள் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றது.

    படுகாயமடைந்த சுல்தான் மற்றும் இதயதுல்லா ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் குறித்து சுல்தான் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடையாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் குடிபோதை அளவிடும் கருவியை பறித்து தப்பி சென்ற மாணவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    சென்னை:

    சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பூ‌ஷன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    பூ‌ஷன் தன்னுடைய விலை உயர்ந்த சொகுசு காரில் அடையாறு நோக்கி வந்து கொண்டிருந்த போது சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து காவலர்கள் காரை மறித்து சோதனை செய்தனர்.

    அப்போது மாணவர் பூ‌ஷன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடிபோதையை அளவிடும் கருவியை வைத்து சோதனை செய்ய முயன்றபோது மாணவர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து கருவியை பறித்துக் கொண்டு காரில் தப்பி ஓடிவிட்டார்.

    அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக மற்ற போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கே அவர்கள் பூ‌ஷனுடைய காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடமிருந்த கருவியை பறிமுதல் செய்து அவரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×