என் மலர்
நீங்கள் தேடியது "Drunkenness"
- ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
- மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,
இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வடிவேல் திவ்யாவை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- வடிவேல் நாகராஜ் என்பவருடன் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் வேலன் என்கிற வடிவேல் (38). கட்டிட தொழிலாளி. இவர் விழுப்புரம் கே.கே. சாலை மணி நகரில் வசித்து வந்த திவ்யாவை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் வடிவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இப்பழக்கத்தை நிறுத்த சொல்லி வடிவேலுவை திவ்யா வலியுறுத்தியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திவ்வாவை காண பக்கத்துவீட்டில் இருந்தவர்கள் சென்றனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டினுள் திவ்யா பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவ்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திவ்யாவின் கணவர் வடிவேல், அவரது உறவினர் நாகராஜ் (30) என்பவருடன் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திவ்யாவின் கணவர் வடிவேல், அவரது உறவினர் நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முத்துக்கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து.
- கோவில் உண்டியை கத்தியால் சேதப்படுத்தினர் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக்கி ருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது30) ,அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணி அளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு குடிபோதையில் அந்த வழியாக வந்த வாகனங்க ளை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியை கத்தியால் சேத ப்படுத்தினர் .இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் 2 பேரும் சங்கரை சரமாரி யாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை ஆசாமிகளை தேடி வருகிறார்.
- காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ், என்ஜீனியர். இவருக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் காங்கேயன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எழில் குடிபோதையில் கார் கார் மீது உரசினார்.
காரினை சாலையோரம் நிறுத்திய சரண்ராஜ், எழிலை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலை தேடி வருகின்றனர்.
- போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்.
- சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஓட்டை போட முயற்சித்துள்ளனர்.
கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (வயது55) என்பவர் மது போதையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார். வாகன ஓட்டிகள் மீறி செல்ல முயன்றால் அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் சுசீலாவை சமாதானம்பபடுத்த முயன்றனர். அப்போது எனது மகன்களான ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் எனது மருமகன் கண்ணன் ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியதாக வாதாடினார். மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் அவ்வப் போது மதுபோதையில் போலீஸ் நிலையம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக செயல்பட்டார். பின்னர் சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
நெல்லை:
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை சென்னையில் இருந்து வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு ரெயில் வந்தபோது அந்த முன்பதிவில்லாத பெட்டியில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சிலர் அதில் ஏறியுள்ளனர். அப்போது அவர்களுக்கும், ரெயிலில் ஏற்கனவே பயணித்த கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து 9 மணி அளவில் மீண்டும் புறப்பட்டது. அப்போது அவர்கள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வந்ததும், ரெயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள்.
அதில் 2 வாலிபர், 2 இளம்பெண்கள் ஆகியோரும் திருச்சூரை சேர்ந்த நடன கலைஞர்கள் என்பதும், அவர்கள் கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுபோதையில் சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ரெயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்னை குணமாக்குவதாக கூறி ஆஸ்பத்திரிக்கும், கோவிலுக்கும் அடிக்கடி அழைத்து சென்றார்.
- ஆனாலும் என்னால் மதுகுடிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கருவந்தா உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 42). கட்டிட தொழிலாளி.
இவருக்கும், கீழசுரண்டையை சேர்ந்த சிவனம்மாள் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படவே ஆத்திரம் அடைந்த சுரேஷ் அரிவாளால் சிவனம்மாளை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுரேஷ் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் தினமும் சண்டையிட்டு வந்ததால் அவரை நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
நேற்று மீண்டும் கணவன்-மனைவி 2 பேரும் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகள் வெளியில் விளையாட சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த சிவனம்மாளை அரிவாளால் சுரேஷ் வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து இரவோடு இரவாக போலீசார் சுரேசை கைது செய்தனர்.
நான் மதுகுடித்துவிட்டு வந்தது பிடிக்காமல் எனது மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். ஆனாலும் என்னால் மதுகுடிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால் எனது மனைவி என்னை அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்தார். என்னை குணமாக்குவதாக கூறி ஆஸ்பத்திரிக்கும், கோவிலுக்கும் அடிக்கடி அழைத்து சென்றார். இது எனக்கு பிடிக்கவில்லை.
நேற்று ஆஸ்பத்திரிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து என்னை திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை வெட்டிக் கொன்றேன். அதேநேரம் மனைவியை கொலை செய்துவிட்டோமே என்று வருந்திய நான் மெயின்ரோட்டிற்கு அரிவாளுடன் ஓடினேன். அப்போது அங்கு வந்த பஸ்சில் விழுந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அது நடக்கவில்லை.
தொடர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் விழ முடிவு செய்து எனது லுங்கியில் பெரிய கல்லை கட்டிக்கொண்டு விழுந்தேன். ஆனால் அதிலும் தப்பித்துவிட்டேன். கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த என்னை போலீசார் பிடித்து வந்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
- குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் தோழிக்கு மாலை சூடுய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பரேலியில் நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வந்தார். குடிபோதையில் இருந்த ரவீந்தனர்குமார் மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
இதனால் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரவீந்தரகுமாரின் செயலால் கோபமடைந்த ராதா, அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று கத்திக் கூச்சலிட்டார். சமதானப்படுத்த முயன்றும் குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
இதன் பின்னர் தகராறு அதிகரித்து இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவரை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். அதன் பிறகு போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
மணமகன் மீது ராதா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மணமகளின் தந்தை திருமணத்திற்கு முன்பு ரூ.2.5 லட்சமும், திருமண நாளில் ரூ.2 லட்சமும் வரதட்சணை கொடுத்துள்ளார். எனவே மணமகன் ரவீந்திரகுமார் உட்படகுடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது
குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
- குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது.
- அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடலூர்:
சிதம்பரம் மந்தக்கரை சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கவரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும் குடிப்பதற்கு பணம் இல்லாததாலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ் நேற்று வீட்டில் இருந்த கவரிங் நகை தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சைனைடை சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் மனைவி காமாட்சி சிதம்பரம் நகர போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே பில்லாலியை சேர்ந்தவர் சரளா (வயது 28). இவர் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சந்திரகிரி என்பவர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தட்டி கேட்க சென்ற அவர்களது உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரளா கொடுத்த புகாரின் பேரில் சந்திரகிரி மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுதர்சனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வல்லம்:
தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவானன் என்பவரின் மகள் சுடர்மணி (29) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அனைவரும் தஞ்சை வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுதர்சன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுதர்சனுக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு குடித்து விட்டு வந்த சுதர்சனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதனை பார்த்த சுதர்சன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுடர்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுடர்மணியின் தந்தை நீலவானன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று சுடர்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- விழுப்புரத்தில் குடிபோதையில் நிதிநிறுவன ஊழியரை நண்பர்கள் கொலை செய்தனர்.
- டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு பள்ளிசந்து குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மரிய பிரபாகரன் (வயது 23). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் இவர் விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள ஆஸ்பத்திரி அருகில் முட்புதறில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து விழுப்புரம் டவுன்போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யில் 3 தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடி போதையில் நண்பர்களே மரிய பிரபாகரனை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விழுப்புரம் பவர்ஆபீஸ்ரோடு தெற்குகாலனியை சேர்ந்த பாலமணி (வயது 23), முத்துமாரி யம்மன்கோவில் தெருவை சேர்ந்த குகன் (24), விழுப்புரம் பானாம்பட்டு பாதை அரவிந்தர் நகரை சேர்ந்த வல்லரசு (23) ஆகி யோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் குகன், வல்ல ரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலை மறைவான பாலமணியை போலீசார் தேடி வருகிறார்கள்.