search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSP demanding payment of outstanding wages"

    • 5 ஆண்டுகளாக முறையான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தூய்மை பணியாளர்கள் புகார் கூறி வந்தனர்.
    • தனியார் தூய்மை பணியாளர்கள் கோவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜியிடம்‌ புகார் மனு அளித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 210 தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 60 பேர் நிரந்தர பணியாளர்கள். ஒப்பந்த பணியாளர்கள் 150 பேர்.

    100 பேருக்கான தூய்மை பணியாளர்களின் பணிகளுக்கு கருப்புசாமி என்பவர் நகராட்சியிடம் ஒப்பந்தம் எடுத்துள்ளார். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    இதில் தனியார் ஒப்பந்ததாரர் கருப்புசாமி என்பவர் இவரது தரப்பில் பணியாற்றி வரும் 100 பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளாக முறையான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தூய்மை பணியாளர்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் நகராட்சியின் சார்பில் இவர்களுக்கு ரூ.355 முதல் ரூ.510 வரை ஊதியம் வழங்கப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் தெரிந்து கொண்டனர்.

    இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.300 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை திரும்ப வழங்க கோரியும் கடந்த இரு வாரமாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே நகராட்சி அதிகாரிகள் தனியார் ஒப்பந்த பணியாளர்களிடம் பேசி இந்த மாதம் 5-ந் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை வழங்குவதாக கூறியிருந்தனர். ஆனால் இதுவரை ஊதியத்தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தனியார் தூய்மை பணியாளர்கள் கோவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பா லாஜியிடம்‌ புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து காவல் துணை ஆய்வாளர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வா ர்த்தை நடத்தினர். இவர்க ளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினர் உடன் இருந்து இவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×