search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "duty allowance"

    மத்திய அரசு ஊழியர்கள் கூடுதல் பணி செய்தால் அதற்கான படி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 மணி நேர பணியை தவிர கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கு கூடுதல் பணிப்படி வழங்கப்பட்டு வந்தது.

    7-வது சம்பள கமி‌ஷனில் இந்த கூடுதல் பணிப்படியை ரத்து செய்துவிடலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதை இப்போது மத்திய பணியாளர் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

    இதன்படி இனி மத்திய அரசு ஊழியர்கள் கூடுதல் பணி செய்தால் அதற்கான படி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அனைத்து துறைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    அதே நேரத்தில் ஆபரே‌ஷனல் பணி என அழைக்கப்படும் மின்துறை, எலக்ட்ரானிக்துறை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதல் பணிப்படி வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறைகளிலும் இந்த பணிகளில் எந்தெந்த ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    கூடுதல் பணிப்படி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், எனவே தான் இந்த படி நிறுத்தப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே ஒரு ஊழியர் எத்தனை மணிக்கு அலுவலகத்திற்கு வருகிறார். எத்தனை மணிக்கு பணி முடிந்து செல்கிறார் என்பது அதில் பதிவாகி இருக்கும். எனவே ஊழியர்கள் கூடுதல் பணி நேரம் செய்கிறாரா? என்பதை இதை வைத்தே கண்டுபிடித்து விடலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

    ஒரு வேளை கூடுதல் பணி செய்ய வேண்டியது இருந்தால் அதற்கு எழுத்து பூர்வமாக அனுமதி பெற்று ஊழியரை அந்த பணியில் ஈடுபடுத்தலாம், அதற்கும் உரிய ஊக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் புதிய நடைமுறையில் கூறப்பட்டுள்ளது.
    ×