என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dyeing owners"
- சாய ஆலைகளுக்கு போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது.
- 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.
திருப்பூர் :
மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், செயலாளா் முருகசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பின்னலாடை தொழிலானது நூல் விலை அதிகரிக்கும்போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாய ஆலைகளுக்கும் போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும் சாயத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்