search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Economically back ward"

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான  இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.

    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்குஉயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தேர்தல் காலத்து தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #10pcquota #economicallybackward #introducedinLokSabha
    ×